அமரிந்தர் சிங்குடன் கூட்டணி அமைக்கும் பாஜ.க.,  - சட்டசபை தேர்தலில் இணைந்து களமிறங்க முடிவு...

பஞ்சாப் முன்னாள் முதலமைச்சர் அமரிந்தர் சிங்குடன் இணைந்து சட்டப்பேரவை தேர்தலை சந்திக்க உள்ளதாக பாஜக தெரிவித்துள்ளது.

அமரிந்தர் சிங்குடன் கூட்டணி அமைக்கும் பாஜ.க.,  - சட்டசபை தேர்தலில் இணைந்து களமிறங்க முடிவு...

பஞ்சாப் அரசியலில் ஏற்பட்ட சலசலப்பு காரணமாக அம்மாநில முதல்வராக இருந்த அமரிந்தர் சிங் பதவி விலகினார். அதன்பின் காங்கிரஸில் இருந்து விலகிய அவர், புதிதாக பஞ்சாப் லோக் காங்கிரஸ் என்ற கட்சியையும் தொடங்கினார். இதையடுத்து அவர் அடுத்தாண்டு நடைபெறும் சட்டமன்ற தேர்தலில் பாஜகவுடன் இணைந்து போட்டியிடுவார் என தகவல் வெளியானது.

இந்த நிலையில், அமரிந்தர் சிங்குடன் இணைந்து சட்டப்பேரவை தேர்தலை பாஜக சந்திக்க உள்ளதாக மத்திய அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் உறுதிப்பட தெரிவித்துள்ளார். இதனை மூத்த தலைவர்களான அமித்ஷா மற்றும் ஜே.பி நட்டா ஆகியோரும் உறுதி செய்திருப்பதாக குறிப்பிட்ட அவர், தொகுதி பங்கீடு விவரம் பின்னர் தெரிவிக்கப்படும் என குறிப்பிட்டுள்ளார்.