மமதாவால் முறியடிக்கப்பட்ட பாஜகவின் ”நபன்னான் சல்லோ”

மமதாவால் முறியடிக்கப்பட்ட பாஜகவின் ”நபன்னான் சல்லோ”

”நான் வலதோ இடதோ இல்லை. எனக்கு தேசியவாதம், தேசிய பக்தி, கூட்டாட்சி அமைப்பு, ஜனநாயகம், ஏழைகள் மீது மட்டுமே நம்பிக்கை உள்ளது.” எனக் கூறியுள்ள மம்தா பானர்ஜி 1998ல் இந்திய தேசிய காங்கிரஸ்ஸிடமிருந்து பிரிந்து திரிணாமுல் காங்கிரஸ் என்ற புதிய கட்சியை தொடங்கினார்.  

நீண்ட நெடிய போராட்டத்திற்கு பிறகு 34 ஆண்டுகளாக ஆட்சி செய்து வந்த இடதுசாரிகளை தோற்கடித்து 2011ல் ஆட்சியைக் கைப்பற்றினார்.  தொடர்ந்து 2016 தேர்தலிலும் 2021 தேர்தலிலும் வெற்றி பெற்று மேற்கு வங்காளத்தில் வலுமையான ஆட்சியை அமைத்துள்ளது.

தொடரும் ரெய்டுகள்:

மேற்கு வங்காளத்தை 2021 சட்டமன்ற தேர்தலில்  கைப்பற்ற முயன்ற பாஜக பெரும் தோல்வியையே சந்தித்தது.  ஆட்சியை கவிழ்க்க பல முயற்சிகளையும் கையாண்டது.  அதன் ஒரு தொடர்ச்சியாக சிபிஐ ரெய்டுகளை திரிணாமுல் காங்கிரஸ்ஸின் எம்.எல்.ஏக்கள் மற்றும் எம்.பிக்கள் வீட்டில் நடைபெற்றது.  ரெய்டுகளிலும் திருப்தியடையாத பாஜக ”நபன்னான் அபியான்” என்ற புதிய திட்டத்தைக் கையிலெடுத்தது.

நபன்னான் அபியான்:

நபன்னான் என்பது மேற்கு வங்காளத்தின் தலைமை செயலகத்தின் பெயராகும்.  இந்த ஓராண்டில் பாஜக பெரிய அளவிலான திட்டங்களை கையிலெடுத்துள்ளது.  அதனை வெற்றியடையச் செய்ய மேற்கு வங்காளத்தில் நபன்னான் அபியான் என்ற திட்டத்தை முன்னெடுத்தது பாஜக. பஞ்சாயத்து தேர்தலுக்கு முன் கட்சிக்கு பலமான அமைப்பும் வலிமைக் குறித்த சோதனையும் மிகவும் முக்கியமானது. 

திட்ட நோக்கம்:

மேற்கு வங்காளத்தில் பாஜகவின் வலிமையை சோதித்து அறியும் முயற்சியாகவே தலைமை செயலகத்தை நோக்கி செல்லும் பயணம் இன்று தொடங்கப்பட்டது. முன்னரே திட்டமிடப்பட்ட இப்பேரணியை தடுக்கும் விதமாக மாநிலம் முழுவதும் காவலர்கள் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது.  

பேரணியில் பங்கேற்றவர்கள் பல இடங்களில் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளனர்.  பேரணியை தடுத்து நிறுத்துவதற்கு முன் ஏற்பாடாக  எதிர்க்கட்சித் தலைவர் சுவேந்து அதிகாரி, லாக்கெட் சாட்டர்ஜி, தாப்ஷி மோண்டோல் மற்றும் திபாங்கர் கராமி உள்ளிட்ட பல பாஜக தலைவர்கள் கைது செய்யப்பட்டனர்.

நபன்னான் சல்லோ:

தலைமை செயலகத்தை நோக்கி பயணம் செய்பவர்கள் “நபன்னான் சல்லோ” என்ற முழக்கத்துடன் பேரணியில் கலந்து கொண்டனர்.  

வன்முறை:

பேரணி காவலர்களால் தடுத்து நிறுத்தப்பட்டதால் மாநிலம் முழுவதும் பாஜகவினர் வன்முறையில் ஈடுபட்டுள்ளனர்.  வன்முறையை அடக்க காவலர்கள் கண்ணீர் புகையை வீசியும் தண்ணீர் பாய்ச்சியும் போராட்டக்காரர்களை அடக்க முயன்று வருகின்றனர்.