ஆம் ஆத்மியை வீழ்த்த பாஜக கையிலெடுக்கும் ‘குஜராத் பெருமித பயணம்’....கைகொடுக்குமா?!!

ஆம் ஆத்மியை வீழ்த்த பாஜக கையிலெடுக்கும் ‘குஜராத் பெருமித பயணம்’....கைகொடுக்குமா?!!

குஜராத்தில் இந்த ஆண்டு இறுதியில் நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில் ஆம் ஆத்மி கட்சியுடன் கடும் போட்டியை பாரதிய ஜனதா எதிர்கொள்கிறது.

பாஜகவின் மாஸ்டர் ஸ்ட்ரோக்:

ஆம் ஆத்மி கட்சித் தலைவர்களின் பொதுக்கூட்டங்களில் கூட்டம் அதிகமாக இருப்பது பாஜகவின் கவலையை அதிகரித்துள்ளது. இத்தகைய சூழ்நிலையில், வாக்காளர்களை கவர பாஜக தனது மாஸ்டர் ஸ்ட்ரோக்கை தொடங்கியுள்ளது. 

பெருமித பயணம்:

பாரதிய ஜனதா கட்சி, தேர்தலுக்கு முன் மாநிலத்தில் 'குஜராத் பெருமித பயணம்' என்ற பிரச்சாரத்தைத் தொடங்கப் போகிறது. இந்த யாத்திரை இன்று முதல் ஐந்து வெவ்வேறு வழித்தடங்களில் தொடங்குகிறது.  இந்த பயணத்தை பாஜக தலைவர் ஜேபி நட்டா தொடங்கி வைக்கிறார். 

பழங்குடியின மக்கள்:

குஜராத் பெருமித பயணத்தின் போது பழங்குடியின வாக்காளர்கள் மீது அதிக கவனம் செலுத்தப்படப் போவதாக செய்திகள் தெரிவிக்கின்றன.  பழங்குடியின  வாக்காளர்களை ஈர்ப்பதே பா.ஜ.க,வின் இந்த பயணத்தின் முக்கிய நோக்கம். பழங்குடியின வாக்காளர்கள் பாரம்பரியமாக காங்கிரஸுக்கு வாக்களித்து வருகின்றனர்.  

இப்போது ஆம் ஆத்மி கட்சி இந்த வாக்காளர்களை கவருவதில் மும்முரமாக உள்ளது. இத்தகைய சூழ்நிலையில், பா.ஜ.க, தனது பயணத்திற்கு தேர்ந்தெடுத்த பாதைகள், பழங்குடியின வாக்காளர்களை அவர்கள் பக்கம் இழுக்கும் நோக்கில் அமைந்துள்ளது. 

மூன்றாவது முறையாக....:

குஜராத்தில் பாஜக மூன்றாவது முறையாக பெருமித பயணத்தைத் தொடங்க உள்ளது.  இதற்கு முன்னதாக 2002 ஆம் ஆண்டு, வகுப்புவாத கலவரத்திற்கு பிறகு அப்போதைய முதலமைச்சர் நரேந்திர மோடி இந்த பயணத்தை மேற்கொண்டார். இதற்குப் பிறகு 2017 தேர்தலிலும் இதே போன்ற பயணம் தொடங்கப்பட்டது.

குஜராத்தில் 2002ல் மொத்தமுள்ள 182 இடங்களில் பாஜக 127 இடங்களில் வெற்றி பெற்றது. அதே போல 2017ல், அக்கட்சி 99 இடங்களையும், காங்கிரஸ் 77 இடங்களையும் பெற்றன. இரண்டு முறையும்  கிடைத்த வெற்றியால் பாஜக உற்சாகத்தில் உள்ள நிலையில், இந்த முறையும் பலன் கிடைக்கும் என்பது உறுதி என அரசியல் நிபுணர்கள் கருத்து கூறுகின்றனர். 

துவாரகையிலிருந்து....:

 பாஜக தலைவர் ஜேபி நட்டா இந்த பயணத்தை துவாரகாவிலிருந்து தொடங்குகிறார். பயணத்தின் இரண்டாவது பாதை மெஹ்சானா மாவட்டத்தில் உள்ள பஹுசராஜியிலிருந்து இருக்கும். இதில் முன்னாள் துணை முதலமைச்சர் நிதின் படேல் கலந்து கொள்கிறார். இது தவிர, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வியாழக்கிழமை யாத்திரையை மூன்று வழித்தடங்களில் தொடங்கி வைக்கிறார்.

இதையும் படிக்க:  மீண்டும் ஒரு நேதாஜியா சசி தரூர்!!!கட்சியால் ஓரங்கட்டப்படும் காரணமென்ன!!!