முதலமைச்சரை கன்னத்தில் அறைந்திருப்பேன் என்று பேசிய மத்திய அமைச்சருக்கு ஜாமீன்...

மஹாராஷ்டிரா முதலமைச்சர் உத்தவ் தாக்கரேயை ஓங்கி அறையப் போவதாக பேசியதற்காக, கைது செய்யப்பட்ட பாஜகவைச் சேர்ந்த மத்திய அமைச்சர் நாராயண் ரானேவுக்கு ஜாமின் வழங்கப்பட்டது.

முதலமைச்சரை கன்னத்தில் அறைந்திருப்பேன் என்று பேசிய மத்திய அமைச்சருக்கு ஜாமீன்...

மஹாராஷ்டிர மாநிலம் ராய்கட் மாவட்டத்தில் நேற்று முன்தினம் நடந்த மக்கள் ஆசி யாத்திரையில், மத்திய அமைச்சர் நாராயண் ரானே பங்கேற்றார். அப்போது பேசிய அவர் முதலமைச்சர் உத்தவ் தாக்கரே இது எத்தனையாவது சுதந்திர தினம் என்பதை கூட அருகில் இருந்தவர்களிடம் கேட்டு தான் தெரிந்து கொண்டாதாக தெரிவித்தார்.

மேலும் தான் அந்த இடத்தில் இருந்திருந்தால் அவரது கன்னத்தில் ஓங்கி அறைந்திருப்பேன் என பேசினார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.  மேலும் பா.ஜ. க மற்றும் சிவசேனா கட்சியினர் இடையை பல இடங்களில் நேற்று மோதல் வெடித்தது.

இதனையடுத்து போலீசார் நாராயண் ரானேவை கைது செய்தனர். தொடர்ந்து நேற்றிரவு மாஜிஸ்திரேட்  முன் நாராயண் ரானேவை   போலீசார் ஆஜர்படுத்தினர். விசாரணைக்கு பின், ரானேவுக்கு  ஜாமின்  வழங்கி மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார்.