நாடு தழுவிய அளவில் போராட்டம் நடத்த போவதாக பஜ்ரங்தள் அமைப்பினர் அறிவிப்பு!!

சர்ச்சைக்குரிய மதக் கருத்துக்கு எதிராக சமீபத்திய வன்முறைகளை கண்டித்து நாடு தழுவிய அளவில் போராட்டம் நடத்த உள்ளதாக பஜ்ரங்தள் அமைப்பினர் அறிவித்துள்ளனர்.
நாடு தழுவிய அளவில் போராட்டம் நடத்த போவதாக பஜ்ரங்தள் அமைப்பினர் அறிவிப்பு!!
Published on
Updated on
1 min read

முகமது நபிகள் குறித்து பாஜக தேசிய செய்தி தொடர்பாளர் நுபுர் சம்ரா பேசிய சர்ச்சைக்குரிய கருத்து சர்வதேச அளவில் பெரும் பிரச்சனையாக உருவெடுத்தது.

இதையடுத்து நுபுர் சர்மாவை கைது செய்ய வலியுறுத்தி கடந்த வெள்ளிக்கிழமை தொழுகைக்கு பிறகு ஏராளமான இஸ்லாமியர்கள் போராட்டத்தில் இறங்கினர்.

டெல்லி, ஜார்கண்ட், உத்திர பிரதேசம், ஜம்மூ காஷ்மீர், ராஜஸ்தான் போன்ற மாநிலங்களில் இஸ்லாமியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் ஜார்கண்ட், உத்திரபிரதேசத்தில் நடத்த போராட்டம் வன்முறையாக மாறி பெரும் கலவரமாக வெடித்தது.

இந்த நிலையில், சர்ச்சைக்குரிய மதக் கருத்துக்கு எதிராக சமீபத்திய வன்முறைகளை கண்டித்து வரும் 16 ஆம் தேதி நாடு தழுவிய அளவில் போராட்டம் நடத்த போவதாக பஜ்ரங்தள் அமைப்பினர் அறிவித்துள்ளனர்.

"இஸ்லாமிய ஜிஹாதி அடிப்படைவாதிகளால் அதிகரித்து வரும் தீவிரவாத சம்பவங்களுக்கு" எதிராக இந்த போராட்டத்தை நடத்த உள்ளதாகவும், விஷ்வ இந்து பரிஷத் அமைப்பின் இளைஞர் பிரிவினர் நாடு முழுவதும் உள்ள மாவட்ட ஆட்சித் தலைமையகங்களை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த போவதாகவும் அறிவித்துள்ளனர்.

வன்முறை சம்பவங்களுக்கு எதிராக குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்திடம் மனுகொடுக்க உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com