பாகிஸ்தானில் 4-வது முறையாக டிக் டாக் செயலிக்கு தடை விதிப்பு...

பாகிஸ்தானில் 4-வது முறையாக டிக் டாக் செயலிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. 

பாகிஸ்தானில் 4-வது முறையாக டிக் டாக் செயலிக்கு தடை விதிப்பு...
டிக்டாக்’ செயலி மூலம் பகிரப்படும் வீடியோக்களால் பல்வேறு சமூகப் பிரச்னைகள் ஏற்படுவதாகக் கூறி அந்தச் செயலிக்கு பாகிஸ்தானில் டிக் டாக் செயலி அடிக்கடி சர்ச்சையில் சிக்குகிறது. அக்டோபர் 2020 ஆம் ஆண்டு பாகிஸ்தானில் முதல் முறையாக டிக் டாக் செயலிக்கு தடை விதிக்கப்பட்டது.
 
பின் சர்ச்சைக்குரிய வீடியோக்களை நீக்குவதாக டிக் டாக் உறுதியளித்தை தொடர்ந்து 10 10 நாட்களுக்குள் தடை நீக்கப்பட்டது. இதையடுத்து மார்ச் மாதத்தில் டிக்டோக்கிற்கு பெஷாவர் உயர் நீதிமன்றம் தடை விதித்து பின் ஏப்ரல் மாதம் நீக்கியது.  
 
அவ்வாறு தற்போது 4-வது முறையாக பாகிஸ்தானில் டிக்டாக் செயலிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. சிந்து மாகாண உயர்நீதிமன்ற உத்தரவு படி ஆட்சேபத்துக்குரிய பதிவுகளை நீக்க தவறியதாக கூறி டிக் டாக் செயலிக்கு பாகிஸ்தான் தொலை தொடர்பு ஆணையம் நேற்று மீண்டும் தடை விதித்தது.