”வங்கிகளிடம் இப்போ உள்ள வலிமை...9 ஆண்டுகளுக்கு முன்பு இல்லை” பிரதமர் மோடி பேச்சு!

”வங்கிகளிடம் இப்போ உள்ள வலிமை...9 ஆண்டுகளுக்கு முன்பு இல்லை” பிரதமர் மோடி பேச்சு!

உலகளவில் வங்கிகள் வலுவான நிலையில் உள்ள நாடுகளில் இந்தியாவும் ஒன்று என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

ஏழாவது வேலைவாய்ப்புத் திருவிழாவில் 70 ஆயிரம் இளைஞர்களுக்கு பணி நியமனங்களை வழங்கும்  பணியை காணொளி வாயிலாக பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். பின்னர் இந்நிகழ்ச்சியில் பேசிய அவர், இந்தியாவில் உருவாக்கப்பட்டுள்ள வேலை வாய்ப்புகள் மூலம் தனிநபர் வருமானம் அதிகரித்து, மூன்றாவது பெரிய பொருளாதார நாடாக மாறும் என்று நம்பிக்கை தெரிவித்தார். 

இதையும் படிக்க : உயருகிறது முதியோர் உதவித்தொகை? அமைச்சரவைக் கூட்டத்தில் ஆலோசனை!

இந்தியாவில் இப்போது வங்கிகள் வலிமையாக உள்ளதுபோல், ஒன்பது ஆண்டுகளுக்கு முன்பு இல்லை என்றும், அப்போதைய ஆட்சிக் காலத்தில் நாட்டின் வங்கிகள் அழிவை சந்தித்ததாகவும் குற்றம்சாட்டினார். 

2014 ஆம் ஆண்டு ஆட்சியமைத்த போது வங்கித் துறையை புதுப்பிக்க முயற்சி செய்து சிறிய வங்கிகளை இணைத்து பெரிய வாங்கிகளாக மாற்றியதாகவும், வங்கிகள் மூடப்பட்டால் குறைந்த அளவு  இழப்பை சந்திக்கும் வகையில் வங்கி திவால் சட்டம் இயற்றியதாகவும் கூறினார்.