"பில்கிஸ் பானு வழக்கை இனியும் ஒத்திவைக்க முடியாது ; இறுதி அறிக்கை தாக்கல் செய்ய உச்சநீதிமன்றம் கெடு..!

"பில்கிஸ்  பானு  வழக்கை இனியும் ஒத்திவைக்க முடியாது ; இறுதி அறிக்கை தாக்கல் செய்ய  உச்சநீதிமன்றம் கெடு..!

பில்கிஸ் பனோ வழக்கு தொடர்பாக ஆகஸ்ட் 7ம் தேதிக்குள் குற்றவாளிகள் தரப்பு, இறுதி அறிக்கை தாக்கல் செய்ய உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2002ஆம் ஆண்டு குஜராத் மாநிலத்தில் கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம் நடந்தது. இந்தச் சம்பவத்திற்குப் பின்னர் அங்கு மிகப் பெரிய அளவில் கலவரம் ஏற்பட்டது. இந்த கலவரத்தில் 700க்கும் மேற்பட்ட இஸ்லாமியர்களும் 250க்கும் மேற்பட்ட இந்துக்களும் கொல்லப்பட்டதாக அதிகாரப்பூர்வமாகக் கூறப்பட்டது. இந்த மோசமான கலவரத்தில் இஸ்லாமியர்கள் பலர் கொல்லப்பட்டனர்.

இந்த கலவரத்தில் நெஞ்சை உலுக்கும் வகையில் பல மோசமான சம்பவங்கள் அரங்கேறின. அப்படித்தான் கடந்த 2002இல் மார்ச் 3ஆம் தேதி அகமதாபாத்தில் உள்ள ரன்திக்பூரைச் சேர்ந்த பில்கிஸ் பானு என்பவரையும் அவரது குடும்பத்தினரையும் ஒரு கும்பல் தாக்கியது. அப்போது 5 மாத கர்ப்பிணியாக இருந்த பில்கிஸ் பானு கொடூரமாகக் கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்த அந்த கும்பல், அவர்களின் குடும்பத்தினையும் அடித்தே கொன்றது.

இது மட்டுமின்றி பில்கிஸின் இரண்டரை வயதுக் குழந்தையைப் பாறையில் மோத வைத்து கொலை செய்தனர். இதில் பில்கிஸ் பானு உடன் டிரக்கில் பயணித்த 14 பேர் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டனர். இந்த கொடூர சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த வழக்கை விசாரித்த சிபிஐ, கடந்த 2004ஆம் ஆண்டு குற்றவாளிகளைக் கைது செய்தது. வழக்கை விசாரித்த மும்பை செசன்ஸ் கோர்ட், கடந்த 2008இல் குற்றவாளிகள் 11 பேருக்கும் ஆயுள் தண்டனை விதித்தது.

ஆயுள் தண்டனையை எதிர்த்து, குற்றவாளிகள் மும்பை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்த நிலையில், அதிலும் அவர்கள் அவர்களுக்கான தண்டனை உறுதியானது. விசாரணைக் காலத்தையும் சேர்த்து 15 ஆண்டுகள் அவர்கள் சிறையில் இருந்தனர். இந்நிலையில், குற்றவாளிகளில் ஒருவர் தங்களை முன்கூட்டியே விடுதலை செய்ய வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தை அணுகினார்.

கேள்வி

வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், அவரது தண்டனையை ரத்து செய்வது குறித்துப் பரிசீலிக்குமாறு குஜராத் அரசுக்கு உத்தரவிட்டது. இதையடுத்து இது தொடர்பாக முடிவெடுக்க பஞ்சமஹால் கலெக்டர் சுஜல் மயாத்ரா தலைமையில் குஜராத் அரசு குழு அமைத்து. இந்த குழு 11 குற்றவாளிகளையும் விடுவிக்கலாம் என்று குஜராத் அரசுக்குப் பரிந்துரை அளித்தது. அதன்படி அவர்கள் விடுவிக்கப்பட்டனர்.

கோத்ரா ரயில் எரிப்பு வழக்கு; 11 பேரின் மரண தண்டனை ஆயுள் தண்டனையாக குறைப்பு!

இந்த வழக்கில், கடமையை சரிவர செய்யாததாகவும், ஆதாரத்தை அழித்ததாகவும் 5 போலீசார், 2 டாக்டர் கள் ஆகியோர் மீது வழக்கு தொடரப்பட்டது. அவ்வழக்கில், கடந்த 2017-ம் ஆண்டு மே 4-ந் தேதி, 7 பேரும் குற்றவாளிகள் என்று குஜராத் ஐகோர்ட்டு தீர்ப்பு அளித்தது.

இருப்பினும், 7 பேர் மீதும் குஜராத் மாநில அரசு எவ்வித ஒழுங்கு நடவடிக்கையும் எடுக்காததால், பில்கிஸ் பனோ, சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு நேற்று இவ்வழக்கில் தீர்ப்பு அளித்தது. 5 போலீசார், 2 டாக்டர்கள் மீதான ஒழுங்கு நடவடிக்கையை நிறைவேற்றுமாறு குஜராத் மாநில அரசுக்கு உத்தரவிட்டது.

குஜராத் அரசு வழங்க முன்வந்த ரூ.5 லட்சம் இழப்பீட்டை பில்கிஸ் பனோ ஏற்க மறுத்தார். இழப்பீட்டு தொகையை அதிகரிக்க கோரிய அவரது மனு மீது  விசாரணை நடத்தப்பட்டது. 

குஜராத் கலவரம்.. நாட்டை உலுக்கிய பில்கிஸ் பானோ கூட்டு பலாத்கார சம்பவம்! 11  குற்றவாளிகளும் விடுதலை | Bilkis Bano Case: All 11 Life Imprisonment  Convicts Released From Jail ...
இவ்வாறிருக்க, தற்போது,   பில்கிஸ் பனோ வழக்கு தொடர்பாக ஆகஸ்ட் 7ம் தேதிக்குள் குற்றவாளிகள் தரப்பு, இறுதி அறிக்கை தாக்கல் செய்ய உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

2004ம் ஆண்டு குஜராத் கலவரத்தின்போது கர்ப்பிணியாக இருந்த பில்கிஸ் பனோவை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து குடும்பத்தினரைக் கொன்ற 11 பேரை, கருணை அடிப்படையில் கடந்த ஆண்டு சுதந்திர தினத்தின்போது குஜராத் அரசு விடுவித்ததனை எதிர்த்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. 

அப்போது வழக்கு தொடர்பாக 11 பேரும் இறுதிஅறிக்கை தாக்கல் செய்ய வலியுறுத்திய நீதிபதிகள், விசாரணையை ஆகஸ்ட் 7ம் தேதி ஒத்திவைத்து, இதற்கு மேலும் வழக்கை ஒத்திவைக்க முடியாது என எச்சரித்தனர்.

இதையும் படிக்க    | பொன்முடி வீட்டில் ரூ.70 லட்சம் பறிமுதல்?