அனல் பறக்கும் பிரச்சாரம்.... பூஜ்ஜியத்திலிருந்து ஹீரோ...

அனல் பறக்கும் பிரச்சாரம்.... பூஜ்ஜியத்திலிருந்து ஹீரோ...

திரிபுராவின் குழந்தைகள் விளக்கு ஏற்றி படிப்பதை நான் பார்த்துள்ளேன் என பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியுள்ளார்.

திரிபுரா சட்டசபை தேர்தலுக்கான பிரசாரம் மும்முரமாக நடந்து வருகிறது.  தேர்தல் பிரச்சாரத்திற்காக பெரிய தலைவர்கள் மாநிலம் முழுவதும் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.  திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தலைவரான மமதா பானர்ஜியும் மாநிலத்தை சென்றடைந்து தேர்தல் சுற்றுப்பயணத்தை தொடங்கியுள்ளார்.  

மற்றொருபுறம், பாதுகாப்புதுறை அமைச்சரும் பாஜகவின் மூத்த தலைவருமான ராஜ்நாத் சிங் திரிபுராவின் தலைநகர் அகர்தலா சென்றடைந்து தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கியுள்ளார்.  அங்கு அவர் உனகோடி மற்றும் மேற்கு திரிபுரா மாவட்டங்களில் பாஜகவின் 'விஜய் சங்கல்ப்' பேரணிகளில் உரையாற்றியுள்ளார்.

உரையின் போது, “​​திரிபுராவின் குழந்தைகள் குத்து விளக்கு ஏற்றி படிப்பதை நான் பார்த்திருக்கிறேன், ஆனால் பாஜக அரசு வந்ததில் இருந்து திரிபுராவில் உள்ள ஒவ்வொரு கிராமத்திற்கும் மின்சாரம் வந்துவிட்டது.  திரிபுராவில் பாஜக பூஜ்யம் என்று மக்களிடம் எல்லாக் கட்சியினர் சொல்லிக் கொண்டிருந்தார்கள்.  ஆனால் 2018ல் பாஜகவை பூஜ்ஜியத்தில் இருந்து ஹீரோவாக்கினார்கள் மக்கள்.  முன்பு இங்கு மின்சாரம் இல்லை, இன்று இங்கு மட்டும் மின்சாரம் வரவில்லை, மேற்கு வங்காளத்துக்கும் மின்சாரம் தருகிறோம்” என்று மமதாவை வம்பிழுக்கும் விதமாக பேசியுள்ளார் ராஜ்நாத் சிங்.

-நப்பசலையார்

இதையும் படிக்க:    பாரிமுனையில் ஏற்பட்ட திடீர் தீ விபத்து....