படகு போக்குவரத்துக்காக திறக்கப்பட்ட பாம்பன் பாலம்...!

படகு போக்குவரத்துக்காக திறக்கப்பட்ட பாம்பன் பாலம்...!

ராமேஸ்வரத்தில் படகுப் போக்குவரத்திற்காக திறந்து விடப்பட்ட பாம்பன் பாலத்தை, 50க்கும் மேற்பட்ட மீன்பிடிப் படகுகள் கடந்து சென்றன.

பாம்பன் பாலம் : 

தமிழ்நாட்டுடன் ராமேஸ்வரத்தை இணைக்கும் 108 ஆண்டுகள் பழமை வாய்ந்த பாம்பன் பாலத்தில், நாள் ஒன்றுக்கு 10க்கும் மேற்பட்ட ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. ஆனால் தற்போது, சில தொழில்நுட்பக் கோளாறுகள் காரணமாக, பாலத்தில் ரயில் சேவைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க :  கூட்டநெரிசலில் 4 பெண்கள் உயிரிழந்ததற்கு...காரணம் இதுதான்...ஈபிஎஸ் குற்றச்சாட்டு!

பாலத்தை கடந்த மீன்பிடிப் படகுகள் :

இந்நிலையில், படகுப் போக்குவரத்திற்காக பாம்பன் பாலம் திறந்து விடப்பட்டுள்ளது. இதனையடுத்து 50க்கும் மேற்பட்ட மீன்பிடிப் படகுகள் பாலத்தை கடந்து செல்கின்றன.