நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர்...தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைப்பு!

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர்...தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைப்பு!

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரின் இரு அவைகளும் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர்:

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் ஆண்டுதோறும் நவம்பர் மாதத்தில் தொடங்கும். ஆனால், இந்த ஆண்டு சற்று தாமதமாக கடந்த டிசம்பர் 7 ஆம் தேதி தொடங்கப்பட்டது. பரபரப்பான அரசியல் சூழ்நிலையில், தொடங்கப்பட்ட நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் டிசம்பர் 29 ஆம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. 

தொடர் அமளியில் எதிர்க்கட்சிகள்:

அதன்படி, டிசம்பர் 7 ஆம் தேதி தொடங்கிய கூட்டத்தொடரின் முதல் நாளில் இருந்தே இந்திய - சீனா எல்லை விவகாரம் தொடர்பாக விவாதிக்க எதிர்க்கட்சிகள் தொடர்ந்து கேள்வியெழுப்பிக்கொண்டு அமளியில் ஈடுபட்டு வந்தனர். இதனால் இரு அவைகளின் நடவடிக்கைகளும் கடுமையாக பாதிக்கப்பட்டு, கூச்சலும் குழப்பமும் நிலவியது. 

இதையும் படிக்க: டிசம்பர் 23...தேசிய விவசாயிகள் தினம் கொண்டாடப்படுவது ஏன்? வாழ்த்து தெரிவித்த முதலமைச்சர்!

இரு அவையும் ஒத்திவைப்பு:

வருகிற டிசம்பர் 29 ஆம் தேதி வரை நாடாளுமன்றத்தின் இரு அவைகளையும் நடத்த திட்டமிட்டிருந்த நிலையில், உறுப்பினர்களின் கோரிக்கையை ஏற்று  நாடாளுமன்றத்தின் இரு அவைகளையும் தேதி குறிப்பிடாமல் இன்று ஒத்திவைக்கப்பட்டது.

இதையடுத்து, நடப்பு குளிர்காலத் கூட்டத்தொடரில் 97 சதவீதம் மக்களவை ஆக்கப்பூர்வமாக செயல்பட்டதாகவும், 13 அமர்வுகளில் 62 மணி நேரம் விவாதம் மேற்கொள்ளப்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது.