ரூ.24 கோடிக்கு ஏலம் போன எருமை மாடு..! விற்பனைக்கு அல்ல என மாஸ் காட்டிய உரிமையாளர்..!

1,500கிலோ எடை கொண்ட ராட்சத எருமை மாடு..!

ரூ.24 கோடிக்கு ஏலம் போன எருமை மாடு..!  விற்பனைக்கு அல்ல என மாஸ் காட்டிய உரிமையாளர்..!

ராஜஸ்தானில் பீம் என்ற எருமை மாட்டை 24 கோடி ரூபாய்க்கு விலைக்கு கேட்டும் தர மறுத்துள்ளார் அதன் உரிமையாளர். ஜோத்பூரில் ஆண்டுதோறும் கால்நடை கண்காட்சி நடைபெறுவது வழக்கம். அவ்வாறு இந்த ஆண்டு நடைபெற்ற கண்காட்சியில் சுமார் ஆயிரத்து 500 கிலோ எடை கொண்ட பீம் என்ற எடுமை மாட்டை ஆப்கானிஸ்தான் ஷேக் ஒருவர் 24 கோடிக்கு விலைக்கு கேட்டும் அதன் உரிமையாளர் தர மறுத்துள்ளார். ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்தவர் அர்விந்த் ஜாங்கிட் தான் பீம் எருமை மாட்டின் உரிமையாளர். பீமை பராமரிப்பற்கு மட்டும் மாதம் 2 லட்சம் ரூபாய் செலவு செய்கிறாராம் அர்விந்த் ஜாங்கிட். பீம் மாட்டின் விந்தணு 0.25 மில்லி லிட்டர் 500 ரூபாய்க்கு விற்கப்படும் நிலையில் வருடத்திற்கு இதன்மூலம் 50 லட்சம் வரை சம்பாதிக்கிறார் அர்விந்த் ஜாங்கிட். இதன்மூலம் பிறக்கும் எருமை மாடுகள் நாளொன்றுக்கு 20 முதல் 30 லிட்டர் வரை பால் கொடுக்கும் திறன் கொண்டவையாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.