கொத்து கொத்தாக உயிரிழந்த மீன்கள்! கழிவு நீர் கலந்ததால் நடந்த கொடூரம்!!!

பெங்களூரில் கழிவு நீர் கலந்ததால், ஏரியில் இருந்த மீன்கள் கொத்து கொத்தாக உயிரிழந்த அவலம் ஏற்பட்டுள்ளது. இதனால், அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கொத்து கொத்தாக உயிரிழந்த மீன்கள்! கழிவு நீர் கலந்ததால் நடந்த கொடூரம்!!!
Published on
Updated on
2 min read

கொத்தனூர் ஏரியில் கழிவு நீர் கலந்ததால், மீன்கள் இறந்ததாக, கர்நாடக மாநில மாசு கட்டுப்பாட்டு வாரியம் (KSPCB) தெரிவித்துள்ளது. இதனால், அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

சமீபத்தில் கர்நாடகாவில் பலத்த மழை காரணமாக, பல இடங்களில் கழிவு நீர் சரியாக சுத்தப்படுத்தப்படாமல் இருக்கிறது. மேலும், புயல் காரணமாக, பல இடங்களில் அடைப்புகள் ஏற்பட்டும் இருப்பதாக புகார்கள் எழுந்த வண்னம் உள்ளது. இந்நிலையில், பெங்களூரு , ஜேபி நகரில் உள்ள கொத்தனூர் ஏரியில், கழிவு நீர் கலந்ததால், கொத்து கொத்தாக் அமீன்கள் இறந்த அவலம் ஏற்பட்டு பெரும் சர்ச்சை கிளம்பியுள்ளது.

இது குறித்து பேசிய அம்மாநில ஆளுங்கட்சியான பாஜக-வைச் சேர்ந்த எம்.எல்.ஏ எம் கிருஷ்ணப்பா, இந்த சம்பவம் நடக்க காரணமே கனமழை மற்றும் மாசுப்பட்ட நீர் தான் எனக் கூறியுள்ளார். ம்ர்ர்லும், இது குறித்து நடவடிக்கைகளை உடனடியாக எடுக்கக் கூறி அதிகாரிகளைக் கேட்டுக் கொண்டுள்ளதாகவும், இதில் சம்பந்தப்பட்டவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கக்கோரியும் கேட்டுக்கொண்டுள்ளதாகத் தெரிவித்தார்.

இது போன்ற சம்பவங்கள் நடக்க காரணம், அதிகாரிகளின் அலட்சியம் தான் என, சமூக ஆர்வலர் ராகவேந்திர பச்சப்புறா என்பவர் பேசியுள்ளார். இது குறித்து பேசிய அவர், “மீன்கள் உயிர் வாழ குறிப்பிட்ட அளவு சுத்தமான தண்ணீர் இருப்பது அவசியம்.  ஆனால், மாசுப்பட்ட கழிவு நீர் கலந்ததால், மீன்கள் இறந்துள்ளது. இது முழுக்க முழுக்க தொழிற்சாலைகளின் தவறு தான், கழிசுநீர் வெளிப்பாடு உறித்த வழிமுறைகளை சரியாக கடைப்பிடிக்காமல் இருப்பதால் தான் இது போன்ற நிலமை உருவாகிறது. ஒவ்வொரு ஆண்டும் மழை காலத்தின் போது இது போன்ற சம்பவங்களை சந்திக்க நேரிடுகிறது.” என்று தனது கவலையை வெளிப்படுத்தினார்.

ஏன் என்றால், கடந்த மார்ச் மாதம் கூட சதுப்பு நிலங்களில் இருந்த மீன்கள் இது போன்ற சம்பவத்தால் இறந்தன. இதனைத் தொடர்ந்து கர்நாடகாவின், குடிமை வசதிகள் அமைப்பான ப்ருகாட் பெங்களூரு மகாநகர பாலிகே (BBMP), கழிவுநீர் ஓடுவதை தடுக்க வேண்டும் என பெங்களூரு நீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் வாரியத்திற்கு கோரிக்கை விடுத்திருந்தது. மேலும், சுமார் 36 நீர்நிலைகள் நீர்வாழ் உயிரினங்களுக்கு ஏற்றவாறு இல்லாததாக, KSPCB தெரிவித்திருந்ததும் குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் தற்போது, பெரிய நீர் நிலையில் இது போன்ற சம்பவம் நடந்ததால், பெரும் பரபரப்பு நிலவியுள்ளது.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com