”பாஜக உத்தரவிட்டால் சிபிஐ இன்று என்னையும் கைது செய்யும்" - அரவிந்த் கெஜ்ரிவால் குற்றச்சாட்டு!

”பாஜக உத்தரவிட்டால் சிபிஐ இன்று என்னையும் கைது செய்யும்" - அரவிந்த் கெஜ்ரிவால் குற்றச்சாட்டு!

Published on

பாஜக உத்தரவிட்டால் CBI இன்று தன்னை கைது செய்யும் என டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் குற்றம்சாட்டியுள்ளார்.

டெல்லியில் தொடர்ந்து சர்ச்சையாகி கொண்டு வரும் புதிய மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில், மணீஷ் சிசோடியா கைது செய்யப்பட்டதை தொடர்ந்து, அடுத்தடுத்து முக்கிய நபர்கள் இந்த வழக்கில் கைது செய்யப்பட்டனர். 

இந்நிலையில் மதுபானக் கொள்கை முறைகேடு தொடர்பாக டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலிடம் CBI இன்று விசாரணை நடத்துகிறது. விசாரணைக்கு செல்லும் முன் செய்தியாளர்களை சந்தித்த அவர், அதிகாரம் மிக்க மத்திய புலனாய்வு அமைப்புகளால் யாரையும் கைது செய்ய முடியும் என்று கூறியவர், பாஜக உத்தரவிட்டால் தானும் இன்று கைது செய்யப்பட வாய்ப்புள்ளதாகவும் கூறியுள்ளார்.

இதற்கிடையில் விசாரணையை கண்டித்து ஐஓடி பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்ட ஆம்ஆத்மி கட்சியினர், குண்டுக்கட்டாக கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com