சிபிஎஸ்இ +2 முடிவுகள் இன்று வெளியானது...!

சிபிஎஸ்இ +2 முடிவுகள் இன்று வெளியானது...!

சிபிஎஸ்இ பிளஸ் 2 தேர்வு முடிவுகள் இன்று வெளியான நிலையில், தேசிய அளவில் சென்னை 3வது இடம் பிடித்துள்ளது. 

சிபிஎஸ்இ 12 வகுப்பு தேர்வு:

சிபிஎஸ்இ 12 ஆம் வகுப்புக்கான இரண்டாவது பருவத் தேர்வு கடந்த ஏப்ரல் 26ம் தேதி தொடங்கி ஜூன் 4ம் தேதி வரை நடைபெற்றது. இதனுடன் தொடங்கிய சிபிஎஸ்இ 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் அண்மையில் வெளியான நிலையில், பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியிட தாமதமாகலாம் என கூறப்பட்டது. 

மாணவர்கள் அவதி:

தேர்வு முடிவுகள் வெளியாக காலதாமதம் ஆனதால், கல்லூரி, பல்கலைக்கழகங்களில் சேர முடியாமல் மாணவர்கள் அவதிக்குள்ளாகினர். இதனால்,  சிபிஎஸ்இ தேர்வு முடிவுகளை விரைந்து வெளியிட வேண்டும் என தமிழக அரசு தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.

இன்று வெளியானது தேர்வு முடிவுகள்:

இந்த நிலையில் இன்று சிபிஎஸ்இ 12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. மாணவர்களின் இரு பருவத்தேர்வுகளின் அடிப்படையில் மதிப்பெண்கள் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மாணவர்கள் பின்னுக்கு தள்ளிய மாணவிகள்:

இந்த தேர்விலும்  வழக்கம் போல் மாணவர்களை பின்னுக்கு தள்ளி மாணவிகளே அதிகம் தேர்ச்சி பெற்றுள்ளனர். அதன்படி மாணவிகள் 94 புள்ளி 54 சதவீதம் பேரும், மாணவர்கள் 91 புள்ளி 25 சதவீதம் பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவ மாணவிகள் சேர்த்து மொத்தம்  92 புள்ளி 71 சதவீதம் பேர் தேர்ச்சி அடைந்துள்ளதாக மத்திய இடைநிலை கல்வி வாரியம்  அறிவித்துள்ளது. 

சென்னை மூன்றாவது இடம்:

சிபிஎஸ்இ பிளஸ் 2 தேர்வு தேர்ச்சி விகிதத்தில் 98.83 சதவீதத்துடன் திருவனந்தபுரம் முதலிடத்தையும், பெங்களூர் இரண்டாவது இடத்தையும், 97.79 சதவீதத்துடன் சென்னை 3வது இடத்தையும் பிடித்துள்ளது.