புற்றுநோய் விழிப்புணர்வு மாரத்தான்.....

புற்றுநோய் விழிப்புணர்வு மாரத்தான்.....

புற்றுநோய் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தனியார் மருத்துவமனை சார்பாக சென்னை, பெசண்ட் நகர் பகுதியில் நடத்தப்பட்ட மாரத்தான் ஓட்டத்தில் ஏராளமானோர் உற்சாகத்துடன் பங்கேற்றனர்.

புற்றுநோய்:

புற்றுநோய் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சென்னை, பெசண்ட் நகரில் உள்ள ஆல்காட் நினைவுப் பள்ளி அருகே தனியார் (காவேரி) மருத்துவமனை சார்பில் 10 கி.மீ மற்றும் 5 கி.மீ தூரத்திற்கு மாரத்தான் ஓட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

சுமார் 500க்கும் மேற்பட்டோர் பங்கேற்ற இந்த மாரத்தான் ஓட்டத்தை காவேரி மருத்துவமனையின் செயல் இயக்குநா் அரவிந்தன் செல்வராஜ் தொடங்கி வைத்தார்.

விழிப்புணர்வு:

தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த காவேரி மருத்துவமனையின் செயல் இயக்குநா் அரவிந்தன் செல்வராஜ்,

 புற்றுநோய் விழிப்புணர்வுக்காக இந்த மாரத்தான் ஓட்டம் நடத்தப்படுகிறது. இதன் மூலம் பெறப்படும் முன்பதிவு கட்டணம் ஏழை எளிய மக்களின் புற்றுநோய் சிகிச்சைக்காக பயன்படுத்தப்படும். புற்றுநோயை ஆரம்ப நிலைகளை கண்டறிந்தால் குணப்படுத்துவது எளிது. நகரங்களை தொடர்ந்து கிராமங்களிலும் புற்றுநோய் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும் எனத் தெரிவித்தார்.

-நப்பசலையார்

இதையும் படிக்க:    இந்தியாவை நோக்கி திரும்பும் உலக நாடுகளின் பார்வை.....