Duke மோகம்.. அந்தரத்தில் பறந்த சோகம்.. கேரளாவில் நடந்த பரிதாபம்!!

Duke மோகம்.. அந்தரத்தில் பறந்த சோகம்.. கேரளாவில் நடந்த பரிதாபம்!!

கேரளாவில் காரை முந்த முயன்ற பைக் ஒன்று எதிரே வந்த கார் மீது மோதி விபத்துக்குள்ளான சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரப்ரபை ஏற்படுத்தியுள்ளது.

கார் மீது மோதி அந்தரத்தில் பறந்த பைக்

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தை அடுத்த வெஞ்ஞாறு மூடு பகுதியில் வழக்கம் போல் வாகனங்கள் சென்று கொண்டிருந்தது. அப்போது, இரண்டு கார்கள் எதிரே எதிரே வந்து கொண்டிருந்தது. அந்த நேரத்தில், டியூக் இருசக்கர வாகனத்தில் வந்த நபர் ஒருவர், முன்னே சென்ற காரை முந்த முயன்றுள்ளார். அப்போது கண்ணிமைக்கும் நேரத்தில் எதிரே வந்த கார் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் அந்தர் பல்டி அடித்து விழுந்த நபரின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

போலீசார் விசாரணை

இதில் படுகாயம் அடைந்த பைக் ஓட்டுனரை பொதுமக்கள் மீட்டு திருவனந்தபுரம் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுப்பி வைத்துள்ளனர் .தொடர்ந்து இந்த விபத்து குறித்து வெஞ்ஞாறு  போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com