கவிழ்ந்த விபத்தில் 7 பேர் உயிரிழப்பு! உறவினர் இல்ல விழாவிற்கு சென்றபோது நேர்ந்த சோகம்!!

கர்நாடகா மாநிலம் பெலகாவி மாவட்டத்தில் கார் பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில் 7 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

கவிழ்ந்த விபத்தில் 7 பேர் உயிரிழப்பு! உறவினர் இல்ல விழாவிற்கு சென்றபோது நேர்ந்த சோகம்!!

கர்நாடக மாநிலம் பெலகாவி மாவட்டம் அகன்டகரே கிராமத்தை சேர்ந்த 7 பேர் உறவினரின் இல்ல விழாவில் கலந்து கொள்ள் காரில் சென்றுகொண்டு இருந்தனர். அகன்டகரே கிராமத்தில் இருந்து பெலகாவி ரயில் நிலையம் நோக்கி கார் சென்று கொண்டிருந்தது. அப்போது கல்யல் புல் என்னும் கிராமம் அருகே கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையின் ஓரத்தில் இருந்த பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. 

இந்த விபத்தில் காரில் சென்ற 7 பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து சென்ற போலீசார் சடலங்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், விபத்து தொடர்பாக வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.