"மக்கள் தொகை கணக்கெடுப்பு சாத்தியமில்லை" மத்திய அரசு!

"மக்கள் தொகை கணக்கெடுப்பு சாத்தியமில்லை" மத்திய அரசு!

நாடாளுமன்ற தேர்தலுக்கு முன் மக்கள் தொகை கணக்கெடுப்பு சாத்தியமில்லை என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

1881 ஆம் ஆண்டு முதல்முறையாக பிரிட்டிஷ் இந்தியாவில் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. இது முதல் ஒவ்வொரு பத்தாண்டுகளுக்கும் ஒருமுறை மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டு வந்தது. பின்னர் இந்தியா சுதந்திரமடைந்த பிறகு 1948 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த சட்டம் இயற்றப்பட்டது. இதைத் தொடர்ந்து நாட்டில் தற்போது 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை மக்கள் தொகை கணக்கெடுப்பு நடந்து வருகிறது.

கடந்த 2020-ம் ஆண்டு ஏப்ரல் 1 முதல் செப்டம்பர் 30-ந்தேதி வரை கணக்கெடுப்பு நடத்த திட்டமிடப்பட்டு இருந்த நிலையில் கொரோனா நோய்த்தொற்று காரணமாக இந்த பணிகள் ஒத்தி வைக்கப்பட்டன. இதற்கிடையே நாடாளுமன்ற தேர்தலுக்கான பணிகள் துவங்க உள்ள நிலையில் வாக்காளர் பட்டியல் திருத்தம் மற்றும் அது சார்ந்த பயிற்சிகள் தொடங்கப்பட உள்ளன. 

இந்நிலையில் தேர்தல் பணிகளுக்கே முன்னுரிமை அளிக்கப்படும் என்பதால் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிகள் நாடாளுமன்ற தேர்தலுக்கு பின்னரே நடைபெற வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 

இதையும் படிக்க:அடுத்தக்கட்ட ஆளுமைகள்!