மத்திய அரசு ஊழியா்களுக்கு தீபாவளி போனஸ்!

மத்திய அரசு ஊழியா்களுக்கு தீபாவளி போனஸ் வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. 

ஒவ்வொரு ஆண்டும் குறிப்பிட்ட மத்திய அரசு மற்றும் மாநில அரசு ஊழியர்களுக்குத் தீபாவளி போனஸ் வழங்கப்படுவது வழக்கம். இந்தாண்டு தீபாவளி பண்டிகை நவம்பா் 12-ம் தேதி கொண்டாடப்படுகிறது. 

இந்நிலையில், தீபாவளி போனஸ் குறித்த அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி மத்திய அரசு ஊழியர்களுக்குத் தீபாவளி போனஸ் வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. C பிரிவு மற்றும் கெசட் ரேங்க் இல்லாத B பிரிவு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் வழங்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.  

அதேபோல துணை ராணுவப் படைகளில் பணிபுரிவோருக்கும் தீபாவளி போனஸ் அளிக்க ஒப்புதல் தரப்பட்டுள்ளது. ஊழியர்களுக்கு அதிகபட்சமாக 7 ஆயிரம் ரூபாய் வரை போனஸ் அளிக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. 

எந்தெந்த ஊழியர்களுக்கு எவ்வளவு போனஸ் கிடைக்கும் என்பது குறித்து மத்திய அரசு விரிவான அறிக்கை ஒன்றையும் வெளியிட்டுள்ளது. இது மத்திய அரசு ஊழியர்களுக்கு மிகப் பெரிய மகிழ்ச்சியைத் தருவதாக அமைந்துள்ளது.