சட்டீஸ்கர் காங்கிரசிலும் சலசலப்பு...  தலைமையை சந்திக்க டெல்லி சென்ற எம்.எல்.ஏ.க்கள்...

பஞ்சாபை தொடர்ந்து, சட்டீஸ்கர் காங்கிரஸ் அரசியலிலும் சலசலப்பு ஏற்பட்டுள்ளதால், எம்எல்ஏக்கள் சிலர், கட்சி தலைமையை சந்திக்க டெல்லி விரைந்துள்ளனர். 
சட்டீஸ்கர் காங்கிரசிலும் சலசலப்பு...  தலைமையை சந்திக்க டெல்லி சென்ற எம்.எல்.ஏ.க்கள்...
Published on
Updated on
1 min read

சட்டீஸ்கர் முதலமைச்சர் புபேஷ் பாகெலுக்கு எதிராக காங்கிரஸ் எம்எல்ஏக்கள் சிலர் போர்க்கொடி பிடித்து வருகின்றனர். இதனால் அங்கு சலசலப்பு ஏற்பட்ட நிலையில், குழப்பத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக சட்டீஸ்கர் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் சிலர் காங்கிரஸ் தலைமையை சந்திக்க டெல்லிக்கு வந்துள்ளனர்.

இதுகுறித்து பேசிய எம்எல்ஏ பிரகஸ்பதி சிங், முதல்வர் பாகெலுக்கு ஆதரவாக சுமார் 60 எம்எல்ஏக்கள் இருப்பதாக கூறினார். அவர் தலைமையிலான ஆட்சியை ராகுல் காந்தி மற்றும் மக்களும் வரவேற்றுள்ளதால், முதல்வரை மாற்றும் எண்ணம் இல்லை எனவும் தெளிவுப்படுத்தினார்.ஜோதி ராதித்ய சிந்தியாவை போல அதிருப்தி எம்எல்ஏவான சிங் தியோவை கட்சியிலிருந்து பிரிக்க பாஜக முயற்சிப்பதாகவும் குற்றஞ்சாட்டினார்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com