குடியரசுத் தலைவரை சந்தித்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்...!

குடியரசுத் தலைவரை சந்தித்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்...!

நீட் விலக்கு மசோதாவுக்கு விரைந்து ஒப்புதல் அளிக்குமாறு டெல்லியில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவை சந்தித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

கிண்டியில் 230 கோடி ரூபாய் மதிப்பில் ஆயிரம் படுக்கைகளுடன் கட்டப்பட்டுள்ள பன்னோக்கு அரசு மருத்துவமனையின் கட்டுமானப் பணிகள் நிறைவடைந்து திறப்பு விழாவுக்கு தயாராகி வருகிறது. முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நினைவாக, அவர் பிறந்த திருவாரூர் மாவட்டத்தில் கலைஞர் கோட்டமும் அமைக்கப்பட்ட நிலையில், இரு நிகழ்வுகளையும் குடியரசுத்தலைவர் திரவுபதி முர்மு தொடங்கி வைக்க அரசு திட்டமிட்டிருந்தது. இந்நிலையில் இன்று சென்னை விமான நிலையத்தில் இருந்து டெல்லி சென்றடைந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு திமுக எம்.பிக்கள் வரேவேற்பளித்தனர். 

இதையும் படிக்க : மாணவர்களுக்கு ஒரு குட் நியூஸ்...நாளை முதல் கோடை விடுமுறை ஆரம்பம்...!

தொடர்ந்து திரவுபதி முர்முவை சந்தித்த முதலமைச்சர், கிண்டியில் அமையவுள்ள கலைஞர் நூற்றாண்டு பன்னோக்கு மருத்துவமனை திறப்பு விழாவிற்கு அழைப்பு விடுத்தார். அப்போது, நீட் விலக்கு மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்க குடியரசுத் தலைவரிடம் முதலமைச்சர் வலியுறுத்தியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.