இடைதேர்தலில் வெற்றி பெற்ற மம்தா பானர்ஜிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து...

பபானிபூரில் தனக்கு வாக்களித்த தாய்மார்கள் மற்றும் சகோதர சகோதரிகள் அனைவருக்கும் நன்றி தெரிவிப்பதாக மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

இடைதேர்தலில் வெற்றி பெற்ற மம்தா பானர்ஜிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து...

பபானிபூர் இடைத் தேர்தலில் மம்தா பானர்ஜி 58 ஆயிரத்து 832 வாக்குகள் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றார். இதனைத் தொடர்ந்து கொல்கத்தாவில் உள்ள அவரது வீட்டின் முன் குவிந்திருந்த தொண்டர்கள் ஆடிப்பாடி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். மேலும் வரிசையாக சென்று மம்தா பானர்ஜிக்கு தங்களது வாழ்த்துகளை தெரிவித்தனர்

இதனைத் தொடர்ந்து தன் வீட்டின் முன் குழுமியிருந்த தொண்டர்கள் மத்தியில் உரையாடிய மம்தா, மிகப்பெரிய வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெறச் செய்த தொண்டர்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்வதாகக் கூறினார். கடந்த 2016ம் ஆண்டு ஒரு சில வார்டுகளில் தனக்கு குறைவான அளவே வாக்குகள் கிடைத்ததாகத் தெரிவித்த அவர், தன் மீது நம்பிக்கை வைத்து வாக்களித்த அனைவருக்கும் நன்றி கூறினார்.

பபானிபூரில் 46 சதவீத மக்கள் பெங்காலி அல்லாதவர்கள் எனவும் அவர்கள் அனைவரும் தங்களுக்கு வாக்களித்து உள்ளதாகவும் தெரிவித்தார். மேற்குவங்கத்தில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின் தனது அதிகாரத்தை பயன்படுத்திய மத்திய அரசு, தன்னைப் பதவியில் இருந்து இறக்க கடுமையாக முயற்சி செய்ததாகவும் தனது காலில் காயம் ஏற்படுத்தியதாகவும் தெரிவித்தார். தனக்கு வாக்களித்த மக்களுக்கும் 6 மாதங்களுக்குள் தேர்தல் நடத்திய தேர்தல் ஆணையத்துக்கும் அவர் நன்றி தெரிவித்தார்.

இந்த நிலையில் வெற்றி பெற்ற மம்தாவுக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது டிவிட்டர் பக்கத்தில்  வாழ்த்து தெரிவித்துள்ளார்.