இந்திய எல்லைக்குள் அத்துமீறி நுழைந்த சீன படைகள்...

இந்திய எல்லைக்குள் கடந்த மாதம் சீன படைகள் அத்து மீறு நுழைந்ததாக் தகவல் வெளியாகியுள்ளது.

இந்திய எல்லைக்குள் அத்துமீறி நுழைந்த சீன படைகள்...

கிழக்கு லடாக் எல்லையில் கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக சீனா தனது துருப்புகளை குவித்து பதற்றத்தை ஏற்படுத்தி வருகிறது. சமீபத்தில் லடாக் எல்லையில் கட்டுப்பாட்டு கோடு அருகே சீனா புதிய ராணுவ முகாம்களை அமைக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறது.

இந்த நிலையில் ஆகஸ்ட் 30 ஆம் தேதி சீன படைகளின் 100க்கும் மேற்பட்ட துருப்புகள் இந்திய எல்லைக்குள் நுழைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. உத்தரகாண்ட் மாநிலம் பரஹோடி பகுதிக்குள் 5 கிலோ மீட்டர் தூரத்திற்கு மேல் சீன வீரர்கள் அத்துமீறி நுழைந்தது குறித்து பாதுகாப்பு படையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து, இந்தோ-தீபெத் எல்லைப்பாதுகாப்பு படையினர் பரஹோடி பகுதிக்கு விரைந்து சென்ற நிலையில் அதற்குள் சீன படைகள் பின்வாங்கிவிட்டதாக கூறப்படுகிறது. இந்தியா சீனா இடையேயான எல்லை பகுதி இதுவரை வரையறுக்கப்படாமல் உள்ள நிலையில் சீனா அவ்வபோது இந்திய எல்லைக்குள் அத்து மீறி நுழைவது தொடர்கதையாகியுள்ளது.