உத்தரகாண்ட்டில் சீன இராணுவத்தினர் நடமாட்டம்... டிரோன்கள், ஹெலிகாப்டர்களை இயக்குவதால் பரபரப்பு...

சுமார் 6 மாதங்களுக்குப் பிறகு, உத்தரகாண்ட் மாநிலத்தின் பராஹோட்டி பகுதியில் சீன இராணுவத்தினர் நுழைந்துள்ளனர்.

உத்தரகாண்ட்டில் சீன இராணுவத்தினர் நடமாட்டம்... டிரோன்கள், ஹெலிகாப்டர்களை இயக்குவதால் பரபரப்பு...
இந்தியா மற்றும் சீனாவுக்கு இடையே எல்லைப் பிரச்சினை தொடர்பாக, இந்திய எல்லைப்பகுதிகளில் சீனா தனது இராணுவத்தை அடிக்கடி குவிப்பது, இரு நாடுகளிடையே பெரும் பதற்றத்தை உண்டாக்கி வருகிறது.
 
இந்த நிலையில், உத்தரகாண்ட் மாநிலத்தின் பராஹோட்டி பகுதியில் உள்ள இந்திய - சீன எல்லையான கட்டுப்பாட்டுக் கோடு பகுதியில், சீனாவின் மக்கள் விடுதலை இராணுவத்தைச் சேர்ந்த சுமார் 40 வீரர்களின் நடமாட்டம் தென்பட்டுள்ளது. கிட்டத்தட்ட 6 மாதங்களுக்குப் பிறகு அப்பகுதியில் சீன இராணுவத்தின் நடமாட்டம் தென்பட்டுள்ளது.

 
அதேபோல், பராஹோட்டிக்கு அருகில் உள்ள சீன விமான தளத்தில் டிரோன்கள் மற்றும் ஹெலிகாப்டர்களை இயக்கி, சீன இராணுவம் தனது செயல்பாட்டை அதிகரித்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. எனினும், நிலைமையைச் சமாளிக்க அனைத்து விதமான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக இந்திய இராணுவ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.