ஆசீர்வாத் யாத்திரை தொடங்குகிறார் சிராக் பாஸ்வான்... மக்களின் ஆசீர்வாதத்தை பெறப்போகிறாராம்...

மக்களின் ஆசிர்வாதத்தை பெற புறப்படுகிறார்  சிராக் பாஸ்வான்

ஆசீர்வாத் யாத்திரை தொடங்குகிறார் சிராக் பாஸ்வான்... மக்களின் ஆசீர்வாதத்தை பெறப்போகிறாராம்...
மக்களின் ஆசிர்வாதத்தை  பெறும் வகையில் ஆசிர்வாத் யாத்திரையை தொடங்கவிருப்பதாக  லோக் ஜனசக்தி கட்சியின் தலைவர் பதவியிலிருந்து சமீபத்தில் நீக்கப்பட்ட சிராக் பாஸ்வான் அறிவித்துள்ளார். பீகாரில் லோக் ஜனசக்தியில் தற்போது உள்கட்சி பூசல் உச்சகட்டத்தை எட்டியுள்ளது. இதனால் மக்களவையின் அதிருப்தி உறுப்பினர்கள் ஒன்று சேர்ந்து சமீபத்தில் நாடாளுமன்ற கட்சித் தலைவரான சிராக் பஸ்வானை நீக்கிவிட்டு அவரது சித்தப்பாவான பசுபதி குமாரை நியமித்தனர். பின்னர் லோக் ஜனசக்தி கட்சியின் தலைவர் பதவியிலிருந்தும் சிராக் பாஸ்வான் நீக்கப்பட்டார்.
 
சிராக் பாஸ்வான் கட்சியில் மூன்று பதவிகளை வைத்திருந் ததாகவும் ஒருவருக்கு ஒரு பதவி என்ற அடிப்படையில் கட்சித் தலைவர் பொறுப்பிலிருந்து அவர் நீக்கப்படுவதாகவும் விளக்கமளிக்கப்பட்டது. இதனால் கடும் ஆத்திரத்தில் இருக்கும் சிராக் பாஸ்வான் மக்களிடம் நேரடியாக செல்ல முடிபெடுத்துள்ளார். அதற்காக மக்களின் ஆசிர்வாதத்தை பெறும் விதமாக  ஆசிர்வாத யாத்திரையை தொடங்க போவதாகவும் அதனை தனது தந்தையின் தொகுதியான ஹாஜிப்பூரிலிருந்து தொடங்க போவதாகவும் அறிவித்துள்ளார். இது லோக் ஜனசக்தி கட்சியினரிடையே பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.