10ம் வகுப்பு மாணவி பலி... லாரிக்கு தீவைத்த ஊர்மக்கள்...

10ம் வகுப்பு மாணவி பலி... லாரிக்கு தீவைத்த ஊர்மக்கள்...

பீகாரில் 10ம் வகுப்பு மாணவி உயிரிழந்த விவகாரத்தில், அவர் மீது மோதிய லாரியை கிராமத்தினர் தீ வைத்துக் கொளுத்தினர். சிவானில் உள்ள ஓர்மா நெடுஞ்சாலையில், பயிற்சி வகுப்புக்குச் சென்ற 10ம் வகுப்பு மாணவி மீது லாரி மோதியதாகத் தெரிகிறது.

இதில் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்த நிலையில், மாணவியின் உடலை நெடுஞ்சாலையில் வைத்து உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து மாணவி மீது மோதிய லாரிக்கு தீ வைக்கப்பட்டதால் அங்கு பெரும் பதற்றம்  நிலவி வருகிறது.

மேலும் படிக்க | கடும் வெப்பத்தால் ஏற்பட்ட காட்டுத்தீ.... பலியானோர் எண்ணிக்கை உயர்வு!!