தண்ணீர் என்று நினைத்து ஆசிட்டை குடித்த கல்லூரி மாணவன்..!

தண்ணீர் என்று நினைத்து கல்லூரி மாணவன் ஆசிட் குடித்த சம்பவம் ஆந்திராவில் அரங்கேறியுள்ளது.

தண்ணீர் என்று நினைத்து ஆசிட்டை குடித்த கல்லூரி மாணவன்..!

ஆந்திர மாநிலம் கிருஷ்ணா மாவட்டம் பகுதியை சேர்ந்தவர் சைதன்யா. இவர் விஜயவாடாவில் உள்ள கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வருகிறார். இந்நிலையில் வழக்கம்போல் நேற்று கல்லூரிக்கு வந்த சைதன்யா அருகில் உள்ள கூல் டிரிங்ஸ் கடைக்கு சென்று கடை உரிமையாளரிடம் தண்ணீர் பாட்டில் கேட்டுள்ளார்.

அதற்கு அவர் பிரிட்ஜில் இருக்கிறது எடுத்து கொள்ளுமாறு கூறியதால், சைதன்யா பிரிட்ஜில் இருந்த தண்ணீர் பாட்டிலை எடுத்து குடித்துள்ளார். ஆனால் குடித்த சில நேரத்திலேயே சைதன்யாவின் வாய் மற்றும் குடல் முழுவதும் வெந்ததால், வலியால் துடித்துள்ளார். உடனே அருகில் இருந்தவர்கள் சைதன்யாவை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

பின்னர் இது குறித்த தகவலின்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், கூல் டிரிங்ஸ்  கடை உரிமையாளரிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் தண்ணீர் பாட்டில் பக்கத்தில் இன்னொரு பாட்டிலில் ஆசிட் ஊற்றி வைத்திருந்ததை தெரியாமல் தண்ணீர் என நினைத்து சைதன்யா குடித்தது தெரியவந்தது. இந்த விவகாரம் கல்லூரி முழுவதும் பரவியதால், மாணவர்கள் ஒன்று சேர்ந்து கடை உரிமையாளரை கைது செய்யக்கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர்.