ஊரடங்கு தளர்வால் அலட்சியமா இருக்காதிங்க மக்களே… வருகிறது டெல்டா பிளஸ் வகை கொரோனா

போதிய கட்டுப்பாடுகளை பின்பற்றாவிட்டால் புதிதாக உருமாறியுள்ள டெல்டா பிளஸ் வகை கொரோனா வைரஸ் பரவும் அபாயம் உள்ளது என எய்ம்ஸ் இயக்குநர் டாக்டர் ரன் தீப் குலேரியா எச்சரித்துள்ளார்.

இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர்,நம் நாட்டில் தற்போது காணப்படும் டெல்டா வகை கொரோனா வைரஸ் பிரிட்டனில் தென்பட்ட வைரஸ் என்றும் இந்த வைரஸானது அதிக பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது என கூறினார்.

அதேபோல் கே -417 எனப்படும் டெல்டா பிளஸ் உருமாறிய வைரஸ் தென்பட்டுள்ளது என்றும் இது ஆபத்தானது இல்லை என கூறப்படுவதாக தெரிவித்தார்.

மேலும் இரண்டாவது அலை அபாயம் இன்னும் முழுமையாக நீங்கவில்லை. அதற்குள் பல மாநிலங்களில் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு வருகின்றன. இதனால் எச்சரிக்கையாகவும், முன்னெச்சரிக்கையாகவும் செயல்பட வேண்டும் என கூறினார்

கட்டுப்பாடுகளை முறையாக பின்பற்றுவதினால் மட்டுமே, புதிதாக உருவாகியுள்ள டெல்டா பிளஸ் வைரசின் ஆபத்தை தடுக்க முடியும் என அவர் கூறினார்.

மேலும்  புதிதாக உருமாறியுள்ள, 'டெல்டா பிளஸ்' கொரோனா வைரஸ் பாதிப்பானது, மஹாராஷ்டிராவில் ஏழு பேருக்கு இருப்பது தெரியவந்துள்ளது என்றும் ரத்னகிரி மாவட்டத்தில் மட்டும், ஐந்து பேருக்கு புதிய உருமாறிய கொரோனா வைரஸ் ஏற்பட்டுள்ளது என தெரிவித்தார்.

இந்த புதிய வகை வைரசால் 10 லட்சம் பேர் பாதிக்கப்படுவர்; அதில், 10 சதவீதம் பேர் குழந்தைகளாக இருப்பர்' என, மருத்துவ நிபுணர்கள் எச்சரித்துள்ளனர் என அவர் தெரிவித்தார்.