பெரும் அரசியல் நெருக்கடிக்கு மத்தியில்...சட்டப்பேரவையில் நாளை நம்பிக்கை தீர்மானம்...!

பெரும் அரசியல் நெருக்கடிக்கு மத்தியில்...சட்டப்பேரவையில் நாளை நம்பிக்கை தீர்மானம்...!
Published on
Updated on
1 min read

பெரும் அரசியல் நெருக்கடிக்கு மத்தியில் ஜார்கண்ட் சட்டப்பேரவையில் நாளை நம்பிக்கைத் தீர்மானம் கொண்டு வரப்பட உள்ளது.

குற்றம் சாட்டிய பாஜக:

ஜார்கண்ட் முதலமைச்சராக இருந்து வரும் ஹேமந்த் சோரன், தனது பதவியை தவறாக பயன்படுத்தி சுரங்கக் குத்தகை பெற்றுக் கொண்டதாக பாஜக குற்றம் சாட்டியது.

ஆளுநருக்கு பரிந்துரை:

தொடர்ந்து, அவரது எம்எல்ஏ பதவியை தகுதிநீக்கம் செய்ய ஆளுநருக்கு தேர்தல் கமிஷன் பரிந்துரைத்ததாக தெரிகிறது. ஆனால் இந்த விவகாரத்தில் ஆளுநர் இதுவரை இறுதி முடிவு எடுக்கவில்லை.

நம்பிக்கை தீர்மானம்:

இந்த நெருக்கடிக்கு தீர்வு காணும் வகையில் தானே முன்வந்து சட்டப்பேரவையில் நாளை நம்பிக்கை தீர்மானம் கொண்டுவர ஹேமந்த் சோரன் முடிவெடுத்துள்ளார். இதற்காக சட்டப்பேரவையில் நாளை சிறப்பு கூட்டத்தொடர் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com