
டெல்லி சுபாஷ் நகர் பகுதியில் சொத்து பிரச்சினை காரணமாக உறவினர்களுக்கு இடையே ஏற்பட்ட தகராறில் இரு பிரிவினரும் தெருவில் வைத்து ஒருவரையொருவர் தாக்கி கொண்டனர்.
இரு குடும்பத்தினருக்கும் இடையே ஏற்கெனவே சொத்து தொடர்பாக மோதல் இருந்து வந்துள்ளது. இந்நிலையில் தற்போது இருத்தரப்பினரும் சாலையில் வைத்து ஒருவரை ஒருவர் கற்களாலும், கம்புகளை கொண்டும் மாற்றி மாற்றி தாக்கிக்கொண்டனர்.
இதனால் அப்பகுதியில் பரபரப்பான சூழல் நிலவியது. இதில் படுகாயமடைந்தோர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதுத்தொடர்பான வீடியோ தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.