லட்சத்தீவுக்கு செல்ல எம்.பி.க்களுக்கு தடை?

லட்சத்தீவுக்கு செல்ல காங்கிரஸ் எம்.பி.க்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

லட்சத்தீவுக்கு செல்ல எம்.பி.க்களுக்கு தடை?

யூனியன்   பிரதேசமான லட்சத் தீவில் சுமார் 66,000 பேர் வசிக்கின்றனர். அவர்களில் 95 சதவீதம் பேர் முஸ்லிம்கள். மத்திய அரசின் சார்  பில் லட்சத் தீவின் தலைமை நிர்வாக அதிகாரியாக   பிரபுல் கோடா படேல் கடந்த ஜனவரியில் நியமிக்கப்பட்டார்.பசு வதை தடுப்பு சட்டம், கடலோர பாதுகாப்பு சட்டம், சமூக விரோத தடுப்பு சட்டம் ஆகியவற்றை புதிய தலைமை நிர்வாக அதிகாரி   பிரபுல் கோடா படேல் கண்டிப்புடன் அமல்படுத்தி வருகிறார். பள்ளி உணவகங்களில் கோழி, மாட்டிறைச்சிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இவை உட்பட அவர் மேற்கொண்டு வரும் பல்வேறு நடவடிக்கைகளுக்கு ஒரு தரப்  பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்த   பின்னணியில், கேரள காங்கிரஸ் எம்.  பி.க்கள் ஹை  பி ஈடன், டி. என்.  பிரதாபன் மற்றும் காங்கிரஸ் மீனவரணி சட்ட ஆலோசகர் சி.ஆர். ராகேஷ் சர்மா ஆகியோர் லட்சத்தீவுக்கு செல்ல அனுமதி கோரி விண்ணப்  பித்தனர். லட்சத் தீவு தலைநகர் கவராத்தி, மாவட்ட ஆட்சியர் அஸ்கர் அலி, காங்கிரஸ் எம்.  பி.க்களின் பயணத்துக்கு அனுமதி அளிக்க மறுத்துவிட்டார்.