காங்கிரஸ் கட்சிக்கு முழு நேர தலைமை வேண்டும் - சசிதரூர்

காங்கிரஸ் கட்சிக்கு முழு நேர தலைமை வேண்டும் என, காங்கிரஸ் எம்.பி. சசிதரூர் கோரிக்கை விடுத்துள்ளார்.

காங்கிரஸ் கட்சிக்கு முழு நேர தலைமை வேண்டும் - சசிதரூர்

காங்கிரஸ் கட்சிக்கு முழு நேர தலைமை வேண்டும் என, காங்கிரஸ் எம்.பி. சசிதரூர் கோரிக்கை விடுத்துள்ளார்.

கேரள மாநிலம் கொச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், சோனியா காந்தியின் தலைமையை தாங்கள் அனைவரும் விரும்புவதாக குறிப்பிட்டுள்ளார். ஆனால் அவர் இடைக்கால தலைவராகத்தான் இருக்கிறார் என்றும், 2 ஆண்டுகளாக முழுநேர தலைவர் இல்லாமல் கட்சி செயல்படுவதாகவும் தெரிவித்துள்ள சசிதரூர், கட்சி கட்டமைப்புக்கு புத்துணர்ச்சியை உண்டாக்க முழுநேர தலைவரை நியமிக்க வேண்டும் என கூறியுள்ளார்.

இந்த கோரிக்கையை காங்கிரஸ் தலைவர்கள் அனைவருமே விடுத்து வருவதாக சுட்டிக் காட்டியுள்ள அவர், ராகுல்காந்தி தலைமையில் புதிய தலைமை உருவெடுக்கும் என நம்புவதாகவும், அது விரைவில் நிகழ வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.