பிரதமர் மோடி வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்பு பலூன்களை பறக்க விட்ட காங்கிரசார்.. ஹெலிகாப்டருக்கு மிக அருகில் பறந்ததால் அதிர்ச்சி!!

ஆந்திராவில் பிரதமர் மோடியின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரசார் கருப்பு பலூன்களை பறக்கவிட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பிரதமர் மோடி வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்பு பலூன்களை பறக்க விட்ட காங்கிரசார்.. ஹெலிகாப்டருக்கு மிக அருகில் பறந்ததால் அதிர்ச்சி!!

பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் தொண்டர்கள் சிலர், பிரதமர் நரேந்திர மோடியின் ஹெலிகாப்டர் அருகே பறந்த கருப்பு பலூன்களை வீசியதாக கூறப்படுகிறது. விஜயவாடாவில் பிரதமர் நரேந்திர மோடியின் பாதுகாப்பு மீறப்பட்டதால் பெரும் பரபரப்பு நிலவியுள்ளது.

ஹைதராபாத்தில் நடைபெற்ற பாஜகவின் தேசிய செயற்குழு கூட்டத்தில் பங்கேற்ற பிரதமர் மோடி, அதனைத் தொடர்ந்து ஆந்திரா மாநிலத்திற்கு வருகை தந்தார். அப்போது விஜயவாடாவில் இருந்து பீமவரம் சென்ற அவர், சுதந்திர போராட்ட வீரர் அல்லூரி சீதாராமராஜூ அவர்களின் பிறந்தநாள் விழாவில் பங்கேற்றார்.

அதற்காக விஜயவாடாவில் இருந்து பீமவரத்துக்கு ஹெலிகாப்டரில் சென்ற போது, அப்பகுதியில் இருந்த காங்கிரசார், அவரது வருகையை எதிர்க்கும் வகையில், கருப்பு பலூன்களை பறக்கவிட்டனர். பிரதமர் மோடியின் வருகையை எதிர்க்க நடைபெற்ற இந்த போராட்டத்தின் ஒரு பகுதியாக பலூன்கள் பறக்கவிடப்பட்டதாக தகவல்கள் கூறுகின்றன.

அவ்வாறு விடப்பட்ட பலூன்கள் பிரதமர் மோடி மற்றும் ஜெகன்மோகன் ரெட்டி பயணித்த ஹெலிகாப்டரின் அருகில் சென்றதால் காவல்துறையினர் அதிர்ச்சி அடைந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக இதுவரை காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 4 பேரை காவல்துறையினர் கைது செய்த நிலையில், அவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார்கள்" என்று ஆந்திரப் பிரதேச மாநிலம் கிருஷ்ணா மாவட்ட டிஎஸ்பி விஜய் பால் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

பிரதமரின் பாதுகாப்பு மீறல் குறித்து எஸ்.பி.ஜி., மத்திய அமைப்புகள் விசாரிக்கின்றன. பிரதமரின் பாதுகாப்பை கண்காணிக்கும் சிறப்புப் பாதுகாப்புக் குழு (SPG) மற்றும் பிற மத்திய அமைப்புகளும் விசாரணையில் ஈடுபட்டுள்ளதுடன், விஜயவாடாவில் பிரதமரின் பாதுகாப்பு மீறல் குறித்து விசாரணையில் ஈடுபட்டுள்ளதாகவும் தெரிகிறது. இந்த ஆண்டு ஜனவரியில், பஞ்சாப் மாநிலம் ஃபெரோஸ்பூர் மாவட்டத்தில் உள்ள ஹுசைனிவாலா அருகே பிரதமர் நரேந்திர மோடியின் வாகனத்தில் பாதுகாப்புக் கோளாறு ஏற்பட்டது. பஞ்சாப் மாநிலம் ஃபெரோஸ்பூர் அருகே நடந்த போராட்டங்கள் காரணமாக அவரது கான்வாய் மேம்பாலத்தில் சிக்கிக் கொண்டது, பிரதமரின் பாதுகாப்பில் ஏற்பட்ட குறைபாடு குறித்து பெரும் விவாதத்தைத் தூண்டியது.