தொடர் தோல்வி..! பாஜகவில் இணைந்த பஞ்சாப் முன்னாள் முதலமைச்சர்..!

தொடர் தோல்வி..! பாஜகவில் இணைந்த பஞ்சாப் முன்னாள் முதலமைச்சர்..!

பஞ்சாப் முன்னாள் மாநில முதலமைச்சரும், மாநிலத்தின் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவருமானவர் இன்று பாஜகவில் தன்னையும் தன் கட்சியையும் இணைத்துக்கொண்டுள்ளார். 

அமரீந்தர் சிங்:

காங்கிரஸ் கட்சியின் பஞ்சாப் மாநிலத்தின் முகமாகவும், அசைக்க முடியாத நம்பிக்கையாகவும் இருந்தவர் கேப்டன் அம்ரீந்தர் சிங். கடந்த 2014ல் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில், பாஜவின் அருண் ஜெட்லிக்கு எதிராக போட்டியிட்டு 2 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இதனையடுத்து 2015ல் அம்மாநில காங்கிரஸ் தலைவராகவும் பொறுப்பேற்றுக்கொண்டார். அதன் பின்னர்  கடந்த 2017ல் காங்கிரஸ் கட்சி சட்டமன்ற தேர்தலை இவர் தலைமையில் சந்தித்தது. அதில் அபார வெற்றியும் பெற்றது.

முதலமைச்சர் - பதவி விலகல்:

பஞ்சாப் மாநிலத்தின் முதலமைச்சராக அம்ரீந்தர் சிங் பொறுப்பேற்று செயல்பல்பட்டுக்கொண்டு நிறுத்த நேரத்தில், நாவ்ஜோத் சிங்கிற்கும் இவருக்கும் இடையில் மோதல் போக்கு நீடித்து வந்தது. கட்சியின் மாநிலத் தலைவராக நாவ்ஜோத் சிங்கை காங்கிரஸ் கட்சி நியமித்ததை அடுத்து, அம்ரீந்தர் சிங் முதலமைச்சர் பதவியில் இருந்து விளங்கியதோடு, காங்கிரஸ் கட்சியில் இருந்தும் விலகினார். 

புதிய கட்சி:

பஞ்சாப் லோக் காங்கிரஸ் எனும் புதிய கட்சியை தொடங்கிய அம்ரீந்தர் சிங், பாஜகவுடன் கூட்டணி அமைத்தது சட்டமன்ற தேர்தலை எதிர்கொண்டார். ஆனால் ஒரு இடத்தில கூட வெற்றிபெறவில்லை. பாஜக தலைவர்களை தொடர்ந்து சந்தித்து வந்த அம்ரீந்தர், பாஜகவில் இணையலாம் எனவும் கூறப்பட்டது. 

பாஜகவில் இணைவு:

அரச குடும்பத்தை சேர்ந்த அம்ரீந்தர், இன்று பாஜகவில் இணைத்துள்ளார். மேலும் தனது பஞ்சாப் லோக் காங்கிரஸ் கட்சியையும் பாஜகவில் இணைத்துள்ளார். இக்கட்சியின் முக்கிய பொறுப்புகளில் 7 முன்னாள் எம்.எல்.ஏக்கள், முன்னாள் எம்.பி. ஒருவரும் உள்ளனர்.

காங்கிரஸ் நிலை என்ன?:

காங்கிரஸ் மீதுபல தலைவர்களும் அதிருப்தி தெரிவித்து வெளியேறி வருகின்றனர். காங்கிரஸ் தன்னை வலுப்படுத்த வேண்டிய வேலைகளை செய்து வரும் நிலையில், காங்கிரசின் மிக முக்கிய நபராக இருந்தவர்  பாஜகவில் இணைந்துள்ளது அரசியல் வட்டத்தில் கவனம் பெற்றுள்ளது.

இதையும் படிக்க: கட்சி அந்தஸ்த்தை இழந்த கட்சிகள்!!!