சர்ச்சையாகும் ’ராஷ்டிரபத்னி’-காங்கிரஸ்க்கு எழும் எதிர்ப்பு

சர்ச்சையாகும் ’ராஷ்டிரபத்னி’-காங்கிரஸ்க்கு எழும் எதிர்ப்பு

ஆதிர் ரஞ்சன் சவுத்ரியின் 'ராஷ்டிரபத்னி' கருத்துக்காக காங்கிரஸ் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று ஸ்மிருதி இரானி வலியுறுத்தியுள்ளார்.

ராஷ்டிரபத்னி:


 
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் மக்களவை எம்பியுமான ஆதிர் ரஞ்சன் சவுத்ரி குடியரசு தலைவர் த்ரௌபதி முர்முவை ராஷ்டிரபத்னி என கூறியுள்ளார்.  மேலும்  த்ரௌபதி முர்மு இந்தியாவில் மிகவும் மோசமான தத்துவத்தை பிரதிநித்துவப்படுத்துகிறார் என்றும் கூறியுள்ளார்.

இதற்கு முன்னதாக முர்மு குடியரசு தலவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட போதும் இந்தியாவில் பட்டியலிடப்பட்ட சதியினரின் நிலை மோசமாகிவிட்டது எனவும் முர்முவை பழங்குடியினர் சின்னமாக ஆளுங்கட்சியினர் பயன்படுத்த கூடாது எனவும் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி கூறியிருந்தார்.

பாஜக கண்டனம்:

ஆதிர் ரஞ்சன் சவுத்ரியின் கருத்துகளுக்கு பாஜக வின் உறுப்பினர்கள் தொடர்ச்சியாக கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

நிர்மலா சீதாராமன்:

மாநிலங்களவையில் சோனியா காந்தி வெளிப்படையாக மன்னிப்பு கேட்க வேண்டுமென்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.

ஸ்மிருதி இரானி:

மக்களவையில் இதுகுறித்து பேசிய மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி, ஆதிர் ரஞ்சன் சவுத்ரியும் சோனியா காந்தியும் இந்தியாவின் தெருக்களிலும் நாடாளுமன்றத்திலும் மன்னிப்பு கோர வேண்டும் என்று ஆவேசமாக பேசியுள்ளார்.  ஸ்மிருதியின் இக்கருத்துக்கு பாஜக உறுப்பினர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

இதைக்குறித்து மேலும் அவர் இந்திய குடியரசு தலைவர் வேட்பாளராக முர்மு அறிவிக்கப்பட்டதிலிருந்து அவர் காங்கிரஸால் விமர்சிக்கப்பட்டு வருகிறார்.  முர்மு நாட்டின் அரசியல் சாசனத்தின் முதன்மையான பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னரும் அவர்களின் விமர்சனம் நிற்கவில்லை என்றும் கூறியுள்ளார்.

காங்கிரஸ் கட்சி பெண் தலைமையை கொண்டிருந்தும் தொடர்ந்து முர்முவை இழிவுபடுத்தும் செயல்களை செய்து வருகின்றனர் என்று கடுமையாக சாடினார் இரானி.

குடியரசு தலைவரை இழிவுபடுத்துவது நாட்டின் ஒவ்வொரு பெண்களையும் ஒவ்வொரு குடிமகனையும் இழிவுபடுத்துவதாகும் என்றும் இரானி குற்றஞ்சாட்டினார்.

காங்கிரஸ் பதில்:

இக்குற்றசாட்டுகளுக்கு பதிலளிக்கும் வகையில் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி ஏற்கனவே மன்னிப்பு கேட்டுவிட்டார் என்று சோனியா காந்தி கூறியுள்ளார்.

குடியரசு தலைவர் முர்முவுக்கு ராஷ்டிரபத்னி என்ற பெயரை
தவறுதலாக பயன்படுத்தியதாகவும் ஆளுங்கட்சி வேண்டுமென்றே மடுவை மலையாக்க முயற்சிக்கின்றனர் எனவும் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி பதிலளித்துள்ளார்.