அடிமேல் அடிவாங்கும் காங்கிரஸ்... ராஜஸ்தானில் மீண்டும் எழுந்த சர்ச்சை....

அடிமேல் அடிவாங்கும் காங்கிரஸ்... ராஜஸ்தானில் மீண்டும் எழுந்த சர்ச்சை....

சச்சின் பைலட்டுக்கும் ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட்டுக்கும் இடையேயான மோதலில் காங்கிரஸ் தலைமை ஒழுங்கு நடவடிக்கை எடுத்துள்ளது.

குற்றச்சாட்டு:

ராஜாஸ்தான் மாநிலத்தில் முதலமைச்சராக உள்ள அசோக் கெலாட், சச்சின் பைலட் இடையே மோதல் நீடித்து வரும் நிலையில் சமீபத்தில் தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த அசோக் கெலாட், சச்சின் பைலட் ஒரு துரோகி என கூறியது குஜராத் காங்கிரசில் சலசலப்பை அதிகரித்து உள்ளது. 

ராஜஸ்தானில்..:

அடுத்த மாதம் 6ம் தேதி ராகுல்காந்தி தலைமையிலான இந்திய ஒற்றுமை பயணம் ராஜஸ்தான் மாநிலத்தை அடையவுள்ள நிலையில் சலசலப்பை குறைக்க அசோக் கெலாட் மீது காங்கிரஸ் ஒழுங்கு நடவடிக்கை எடுக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  

இதற்காக காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே. சி வேணுகோபால் இன்று ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் சென்றடைவார் என்றும், ராகுல்காந்தி ராஜஸ்தானை அடைவதற்குள் சமாதானம் செய்ய முயற்சிகள் மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவித்துள்ளார். 

முக்கிய சந்திப்பு:

முன்னதாக காங்கிரஸ் மூத்த தலைவர்களான ராகுல்காந்தி மற்றும் பிரியங்கா காந்தியை சந்தித்த கே.சி வேணுகோபால், டெல்லியில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன் கார்கேவை சந்தித்தபின் இன்று ராஜஸ்தான் செல்ல உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

-நப்பசலையார்

இதையும் படிக்க:   தமிழ்நாட்டில் இத்தனை ஊழல் வழக்குகளா... என்ன செய்யப் போகிறது நீதித்துறை!!!