நாட்டில் கோவாக்சினை அடுத்து தயாராகும் கோர்பவேக்ஸ்...

இந்தியாவிலேயே தயாரிக்கப்படும் கொரோனாவுக்கான தடுப்பூசியாக கோவாக்சினை அடுத்து கோர்பவேக்ஸ் தயாராகிறது.

நாட்டில் கோவாக்சினை அடுத்து தயாராகும் கோர்பவேக்ஸ்...

இந்தியாவிலேயே தயாரிக்கப்படும் கொரோனாவுக்கான தடுப்பூசியாக கோவாக்சினை அடுத்து கோர்பவேக்ஸ் தயாராகிறது. இதனை பயலாஜி பார்மசூட்டிக்கல் என்ற ஐதராபாத்தில் உள்ள நிறுவனம் தயாரிக்கிறது. இந்த நிறுவனம் 73 ஆண்டுகளாக இயங்கி வருகிறது.

உலக சுகாதார நிறுவனம் அங்கீகரித்துள்ள தட்டம்மை ரூபெல்லா போன்ற நோய்களை எதிர்த்து எட்டு தடுப்பூசிகளை தற்பொழுது தயாரித்து வருகிறது. இந்நிலையில் கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசி தயாரிப்பிலும் இந்நிறுவனம் இறங்கியுள்ளது. இந்த தடுப்பூசி மூன்றாம் கட்ட பரிசோதனைகள் நடைபெற்று வருவதாகவும் இது 90% பாதுகாப்பு வழங்குவதாகவும் மத்திய கொரோனா நிபுணர்கள் குழுவின் தலைவர் என் கே அரோரா தெரிவித்துள்ளார்.

இந்நிறுவனம் 300 மில்லியன் டோஸ் தடுப்பூசி தயாரிக்க மத்திய அரசு 1500 கோடி ரூபாய் நிதி வழங்கியுள்ளது. கடந்த ஆண்டு நவம்பர் மாதம் இந்த தடுப்பூசியின் முதல் மற்றும் இரண்டாம் கட்ட சோதனைகள் மத்திய அரசின் அனுமதியுடன் நடைபெறத் தொடங்கின. 18 முதல் 65 வயதுக்கு உள்ளானவர்கள் 360 பேர் மீது இந்த சோதனை நடத்தப்பட்டது. இந்த தடுப்பூசியும் 2 டேஸ் வழங்கப்பட வேண்டும் 28 நாட்கள் இடைவெளியில் இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் இரண்டாவது வாரத்தில் மூன்றாவது கட்ட சோதனைகளுக்கான அனுமதி கிடைத்தது.

இந்தியா முழுவதும் 15 இடங்களில் 18 முதல் 60 வயதுக்குள் ஆனவர்களில் 1268 பேர் மீது இந்த சோதனை நடைபெறுகிறது. இந்த ஆண்டு அக்டோபர் மாதம் முதல் இந்த தடுப்பூசி பயன்பாட்டுக்கு வரும் என்று எதிர்பார்ப்பதாக மத்திய நிபுணர்கள் குழுவின் தலைவர் அரோரா தெரிவித்துள்ளார். மேலும் இது அனைத்து வயதினர் இடமும் பாதுகாப்பான தடுப்பூசி ஆக இருப்பதாகவும் கூறினார்.  இரண்டு டோஸ்களும் ரூபாய் 250 க்கு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியாவில் தற்போது பயன்பாட்டில் இருக்கும் கோவிஷீல்ட் தடுப்பூசி 76% பாதுகாப்பு தருகிறது. கோவாக்சின் 81 சதவீதம் பாதுகாப்பு தருகிறது. ஸ்புட்னிக் வி 90% பாதுகாப்பு தருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.