மகாராஷ்டிராவில் மீண்டும் தலைதூக்கும் கொரோனா பாதிப்பு!

மகாராஷ்டிராவில் தினசரி கொரோனா பாதிப்பு மீண்டும் ஒன்பதாயிரத்தை தாண்டியுள்ளது.

மகாராஷ்டிராவில் மீண்டும் தலைதூக்கும் கொரோனா பாதிப்பு!

மகாராஷ்டிராவில் தினசரி கொரோனா பாதிப்பு மீண்டும் ஒன்பதாயிரத்தை தாண்டியுள்ளது.

மகாராஷ்டிர மாநிலத்தில், கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையும், உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் தொடர்ந்து குறைந்து வருகிறது. அம்மாநில சுகாதாரத்துறை நேற்று வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, மாநிலம் முழுவதும்  புதிதாக ஒன்பதாயிரத்து 771 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 60 லட்சத்து 61 ஆயிரத் 404 ஆக அதிகரித்துள்ளது. மராட்டியத்தில் நேற்று ஒரேநாளில் 10 ஆயிரத்து 353 பேர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதன் மூலம் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 58 லட்சத்து 19 ஆயிரத்து 901 ஆக அதிகரித்துள்ளது.