மீண்டும் அதிகரிக்கும் கொரோனா.. முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை துரிதப்படுத்த அறிவுறுத்தல்!!

இந்தியாவில் கடந்த 3 மாதங்களில் இல்லாத அளவுக்கு தினசரி கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ள நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள தமிழ்நாடு உள்ளிட்ட 5 மாநிலங்களை சுகாதாரத்துறை வலியுறுத்தியுள்ளது.

மீண்டும் அதிகரிக்கும் கொரோனா.. முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை துரிதப்படுத்த அறிவுறுத்தல்!!

இந்தியாவில் கொரோனா தொற்றின் முற்றிலும் குறைந்த நிலையில் பல மாநிலங்கள் கட்டுப்பாடுகளை முழுமையாக விலக்கியுள்ளன.

இந்த சூழலில் கடந்த 3 மாதங்களில் இல்லாத அளவுக்கு தினசரி கொரோனா பாதிப்பு 4 ஆயிரத்து 41 ஆக அதிகரித்துள்ளது. குறிப்பாக மகாராஷ்ட்ராவில் மட்டும் கடந்த ஒரு வாரத்தில் கொரோனா பாதிப்பு எட்டு சதவீதம் அதிகரித்துள்ளது.

மும்பையில்  மே மாதத்தில் மட்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை முந்தைய மாதத்துடன் ஒப்பிடும் போது 231 சதவீதம் அதிகரித்ததாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

பாதிப்பு எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்தால் கொரோனா 4வது அலை ஏற்படலாம் என்ற அச்சம் எழுந்துள்ளது.

இதனிடையே தமிழ்நாடு, தெலங்கானா, கர்நாடகா, மகாராஷ்டிரா ஆகிய 5  மாநிலங்கள் தொற்றுப் பரவலை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு மத்திய சுகாதாரத்துறை கடிதம் எழுதியுள்ளது. 5 மாநிலங்களும் கண்காணிப்பை தீவிரப்படுத்தவும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை துரிதப்படுத்துமாறும் அறிவுறுத்தியுள்ளது.