கொரோனா பாதித்தவர்களுக்கு 3 மாதங்களுக்கு பிறகே "கூடுதல் டோஸ்" செலுத்த வேண்டும்...சுகாதார அமைச்சகம்

கொரோனா பாதித்தவர்களுக்கு 3 மாதங்களுக்கு பிறகே
கொரோனா பாதித்தவர்களுக்கு 3 மாதங்களுக்கு பிறகே "கூடுதல் டோஸ்" செலுத்த வேண்டும்...சுகாதார அமைச்சகம்
Published on
Updated on
1 min read

கொரோனா பாதித்தவர்களுக்கு 3 மாதங்களுக்கு பிறகே "கூடுதல் டோஸ்" செலுத்த வேண்டும்  என அனைத்து மாநில அரசுகளுக்கும் மத்திய சுகாதார அமைச்சகம் கடிதம் எழுதியுள்ளது.

ஜனவரி 10 ஆம் தேதி முதல் இந்தியாவே கொரோனா பெருந்தொற்றுக்கு எதிரான"கூடுதல் டோஸ்-Precaution dose"தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கியுள்ளது. முதலில் முன்கள பணியாளர்கள் மற்றும் 60 வயதுக்கு மேற்பட்ட தகுதியுடைய மக்களுக்கு செலுத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில் இதுதொடர்பான சுற்றறிக்கையை மத்திய சுகாதார அமைச்சகத்தின் கூடுதல் செயலாளர் விகாஸ் செல் அனைத்து மாநில மற்றும் யூனியன் அரசுகளுக்கு அனுப்பி உள்ளார். 

அதில் ஜனவரி 10 ஆம் தேதி முதல் செலுத்தப்பட்டு வரும் "கூடுதல் டோஸ்" தடுப்பூசி செலுத்தி கொள்ள தகுதியுடைய நபர்கள் 2 வது டோஸ் தடுப்பூசி செலுத்தி கொண்ட நாளில் இருந்து 9 மாதங்கள் அதாவது 39 வாரங்கள் முடிந்த பின்னரே கூடுதல் டோஸ் செலுத்தி கொள்ள அனுமதிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார். 

மேலும், கொரோனா தொற்று ஒருவருக்கு உறுதி செய்யப்பட்டால் 3 மாதங்களுக்கு அந்த நபர் முதல் மற்றும் 2வது டோஸ் தடுப்பூசி செலுத்தி கொள்ள கூடாது என ஏற்கனவே மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. 

அதே நிலை, கூடுதல் டோஸ் தடுப்பூசிக்கும் பொருந்தும் என மத்திய சுகாதார அமைச்சகம்  குறிப்பிடப்பட்டுள்ளது. 

இந்த தகவலை மக்களிடம் சேர்க்கும் வகையில் உள்ளூர் ஊடகங்கள் மூலம் மக்களிடம் தெரிவிக்க மாநில மற்றும் யூனியன் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அக்கடிதத்தில் மத்திய சுகாதார கூடுதல் செயலாளர் கேட்டு கொண்டுள்ளார்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com