கரப்சனும் காங்கிரசும்... ஊழலும் பாஜகவும்.....

கரப்சனும் காங்கிரசும்... ஊழலும் பாஜகவும்.....

காங்கிரஸ் அரசு மீது 60-க்கும் மேற்பட்ட வழக்குகளில் ஊழல் புகார்கள் இருப்பதாகவும், இந்த வழக்குகளை லோக் ஆயுக்தா விசாரித்து வருவதாகவும் முதலமைச்சர் கூறியுள்ளார். 

பாஜகvsகாங்கிரஸ்:

கர்நாடகாவில் ஊழலால் பரபரப்பு நிலவி வரும் சூழலில் காங்கிரசும், பாஜகவும் ஒருவர் மீது ஒருவர் ஊழல் குற்றச்சாட்டுகளை சுமத்தி வருகின்றனர்.  பாஜக அரசு ஊழல் நிறைந்த ஆட்சி என்று காங்கிரஸ் குற்றம் சாட்டியதற்கு, முதலமைச்சர் பசவராஜ் பொம்மை பதிலளித்துள்ளார். 

கரப்சனும் காங்கிரசும்:

இதுகுறித்து பசவராஜ் பொம்மை காங்கிரஸ் மற்றும் ஊழல் இரண்டும் 'சி'யிலேயே தொடங்குகிறது எனவும் எனவே இரண்டும் ஒன்றுதான் எனவும் கூறியுள்ளார்.  ராகுல் காந்தி மீது 60-க்கும் மேற்பட்ட  ஊழல் புகார்கள் உள்ளன எனவும் இந்த வழக்குகளை லோக் ஆயுக்தா விசாரித்து வருகிறது எனவும் காங்கிரஸ் ஆட்சியில் ஊழல் உச்சத்தில் இருந்தது எனவும் பொம்மை தெரிவித்துள்ளார்.  மேலும் தற்போது அனைத்து வழக்குகளும் லோக் ஆயுக்தா விசாரணைக்கு அனுப்பப்பட்டுள்ளன எனவும் முதலில் அவரது ஊழல் வழக்குகளுக்கு பதில் சொல்லட்டும் எனவும் கூறியுள்ளார்.

சட்டசபை தேர்தல்:

கர்நாடகாவில் இந்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெறவுள்ளது.  இப்படிப்பட்ட சூழ்நிலையில், பாஜக அரசை சுற்றி வளைக்க, எதிர்க்கட்சியான காங்கிரஸ் ஊழலைப் பிரச்சினையாக்கி வருகிறது.  ஊழலை ஊக்குவிப்பதாகக் குற்றம் சாட்டி, பாஜகவுக்கு எதிராக காங்கிரஸ் பிரச்சாரத்தைத் தொடங்கியுள்ளது. பாஜக ஆட்சியில் வளர்ச்சிப் பணிகளுக்கு 40 சதவீதம் கமிஷன் எடுக்கப்படுவதாக காங்கிரஸ் குற்றம்சாட்டியுள்ளது.  காங்கிரஸின் குற்றச்சாட்டுகளை எதிர்த்து பாஜகவும் காங்கிரஸ் ஆட்சியின் ஊழல் விவகாரத்தை வெளிகொண்டு வந்துள்ளது.  

வளர்ச்சி பணிகளில்:

மேலும் இரு கட்சிகளும் பரஸ்பரம் குற்றம் சாட்டுவதில் மும்முரமாக உள்ளன.  பாஜக ஆட்சியில் வளர்ச்சிப் பணிகளுக்கு 40 சதவீதம் கமிஷன் எடுக்கப்படுவதாக காங்கிரஸ் குற்றம்சாட்டியுள்ளது.  இதில் அரசு ஊழலை ஊக்குவிப்பதாக குற்றம் சாட்டப்பட்டதோடு பாஜக ஆட்சியில் வளர்ச்சிப் பணிகளுக்கு 40 சதவீதம் கமிஷன் எடுக்கப்படுவதாக காங்கிரஸ் குற்றம்சாட்டியுள்ளது. 

ஓட்டுக்கு காசு:

வரும் சட்டசபை தேர்தலில் வாக்காளர்களை கவர லஞ்சம் கொடுத்ததாக முதலமைச்சர் பசவராஜ் பொம்மை மற்றும் எம்எல்ஏ ரமேஷ் ஜார்கிஹோலி மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. ஜார்கிஹோலி ஒரு ஓட்டுக்கு ரூ.6000 என்று பொதுக்கூட்டத்தில் அறிவித்துள்ளதாக காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளாது காங்கிரஸ்.

-நப்பசலையார்

இதையும் படிக்க:    இந்தியாவில் பாதிக்கப்பட்ட இறக்குமதியும் ஏற்றுமதியும்.... வெளியிடப்பட்ட புள்ளி விவரங்கள்!!!