இனிமே எல்லாமே புதுசு தான்... புதிய கல்வி கொள்கையின்படி பாடத்திட்டங்கள்...

புதிய கல்விக் கொள்கையை நடப்பு கல்வியாண்டிலேயே அறிமுகம் செய்யும் வகையில் பாடத் திட்டத்தை பல்கலைக்கழகங்கள் உருவாக்கி வருகின்றன. 

இனிமே எல்லாமே புதுசு தான்... புதிய கல்வி கொள்கையின்படி பாடத்திட்டங்கள்...

மத்திய அரசு புதிய கல்விக் கொள்கையை நாடு முழுவதும் அறிமுகம் செய்துள்ளது. இந்நிலையில், இந்த புதிய கல்விக் கொள்கையில் தெரிவிக்கப்பட்டுள்ள அம்சங்களை பின்பற்றி, தங்களுக்கான பாடத்திட்டங்களை தயாரிக்கும் பணியில் பல்வேறு பல்கலைக் கழகங்களும், ஐஐடி நிர்வாகங்களும் ஈடுபட்டுள்ளன. இந்த கல்வி  ஆண்டிலேயே புதிய பாடத்திட்டத்தை அறிமுகம் செய்ய இருப்பதாகவும் அவை தெரிவித்துள்ளன.  

தொழில் படிப்புகள் அல்லாத, முதுநிலைப் பட்டப் படிப்புகளில் பிளஸ் 2  முடித்த மாணவர்கள் நேரடியாகவே சேரும் வகையில் ஒரு புதிய முதுநிலைப் பட்டப் படிப்பும் உருவாக்கப்பட்டு வருகிறது.

புதிய கல்விக் கொள்கையின் அடிப்படையில் இந்த புதிய படிப்புகளில் சேர்ந்து படிக்கும் மாணவர்கள் விரும்பினால் அதிலிருந்து வெளியேறவும் வாய்ப்பு வழங்க மத்திய பல்கலைக் கழகம் திட்டமிட்டுள்ளது.