"தமிழகத்திற்கு உரிய நீரை கர்நாடக அரசு வழங்கும்" டிகே சிவகுமார் உறுதி!

"தமிழகத்திற்கு உரிய நீரை கர்நாடக அரசு வழங்கும்" டிகே சிவகுமார் உறுதி!
Published on
Updated on
1 min read

கர்நாடக அரசு தமிழகத்திற்கு தர வேண்டிய நீரை வழங்கும் என கர்நாடக துணை முதல்வர் டி கே சிவகுமார் பேட்டியளித்துள்ளார்.

கர்நாடக அரசு தமிழகத்துக்கு வழங்க வேண்டிய உரிய நீரை வழங்காமல் இருக்கும் நிலையில் உடனடியாக தமிழகத்திற்கு தண்ணீர் வழங்கக் கோரி தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் ஒன்றிய நீர்வளத்துறை அமைச்சரை நேரில் சந்தித்து வலியுறுத்தினார். இந்நிலையில் பெங்களூருவில் பத்திரிகையாளர்களிடம் பேசிய கர்நாடக துணை முதல்வர் மற்றும் நீர்வளத்துறை அமைச்சருமான டி கே சிவக்குமார் கர்நாடக மாநிலத்தில் கடந்த சில வருடங்களாக பருவமழை உரிய முறையில் பெய்து வந்தது ஆனால் இந்த வருடம் பருவமழை பாதிப்படைந்துள்ள காரணத்தினால் அணைகளில் நீர் அளவு குறைந்து காணப்படுகிறது. 

தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விட வேண்டும் என்ற கோரிக்கையை மதிக்கிறோம். இதற்காக கர்நாடக மாநிலத்திடம் உள்ள நீரை திறந்து விட முடிவு செய்துள்ளோம். ஆனால் பெங்களூரு நகருக்கு தேவையான அளவு குடிநீரை தேக்கி வைத்துக் கொண்டு மீதமுள்ள நீர் பங்கீடு செய்து கொள்ளப்படும். ஒருவேளை இந்த வருடம் வறட்சி பாதித்தால் வறட்சி காலத்தில் நீர் பங்கீடு செய்து கொள்வதாக உள்ள ஃபார்முலா அடிப்படையில் மாநிலங்களுக்கு இடையே தண்ணீர் பகிர்ந்து கொள்ளப்படும் என தெரிவித்தார்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com