இந்தியாவில் 3 லட்சத்து 37 ஆயிரத்தை தாண்டியது கொரோனா பாதிப்பு...! ஒரேநாளில் தீவிர தொற்று பாதிப்புக்கு 488 பேர் பலி

இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு 3 லட்சத்து 37 ஆயிரத்தை தாண்டியுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்தியாவில்  3 லட்சத்து 37 ஆயிரத்தை தாண்டியது கொரோனா பாதிப்பு...! ஒரேநாளில் தீவிர தொற்று பாதிப்புக்கு  488 பேர் பலி

இந்தியாவில் ஒமிக்ரான் பரவலுக்கு பின், தினசரி கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதன்படி நேற்று ஒரே நாளில் புதிதாக 3 லட்சத்து 37 ஆயிரத்து 704 பேருக்கு தொற்று உறுதியாகிருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இது நேற்றைய பாதிப்பை காட்டிலும் 9 ஆயிரத்து 550 என்ற அளவில் குறைந்துள்ளது. இதனால், கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருவோரின் எண்ணிக்கையும் 21 லட்சத்து 13 ஆயிரத்து 365 ஆக உயர்ந்துள்ளது. மேலும், ஒரே நாளில் தீவிர தொற்று பாதிப்புக்கு 488 பேர் பலியாகியுள்ளனர். 2 லட்சத்து 42 ஆயிரத்து 676 பேர் தொற்றிலிருந்து மீண்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், ஒமிக்ரான் பாதிப்புக்கு உள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 10 ஆயிரத்து 50 ஆக அதிகரித்துள்ளது.

இது நேற்றைய எண்ணிக்கையை விட 4 புள்ளி 69 சதவீதம் அதிகம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. புதிய பாதிப்புகள் அதிகரித்து வருவதன் எதிரொலியாக நாட்டின் பாதிப்பு விகிதம் 17.22 சதவீதமாக அதிகரித்துள்ளது.