கேரளாவை அடுத்தடுத்து குறிவைக்கும் கொடிய வைரஸ்கள்... தற்போது பரவும் நோரோ வைரஸ்... 

கேரளா மாநிலத்தின் வயநாடு மாவட்டத்தில் 13 பேருக்கு நோரோவைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

கேரளாவை அடுத்தடுத்து குறிவைக்கும் கொடிய வைரஸ்கள்... தற்போது பரவும் நோரோ வைரஸ்... 

நாடு முழுவதும் பரவிய கொரோனா வைரஸ் பாதிப்பின் இரண்டாவது அலை பல மாநிலங்களிலும் கட்டுக்குள் வந்து இயல்பு நிலையை நோக்கி பயணித்துக் கொண்டிருக்கும் நிலையில், அண்டை மாநிலமான கேரளாவில் மட்டும் இன்னும் பாதிப்பு குறைந்தபாடில்லை.

இந்த நிலையில் வயநாட்டில் வைத்திரி அருகேயுள்ள பூக்கோடு எனும் கிராமத்தில் செயல்பட்டு வரும் கால்நடை கல்லூரி மாணவர்கள் 13 பேர் நோரோ வைரஸ் தாக்குதலுக்கு ஆளாகியது கண்டறியப்பட்டுள்ளது. நோரோவைரஸ் இரைப்பை குடல் நோயை ஏற்படுத்தும்.

நோரோவைரஸ் பாதிப்பு வயிறு மற்றும் குடலின் உட்புறத்தில் வீக்கத்தை ஏற்படுத்தி கடுமையான வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கை உண்டாக்கும். தொற்று பாதித்தவர்களுடம் நெருங்கி பழகுபவர்களுக்கும் இந்நொய் பரவக்கூடிய தன்மை கொண்டது.

நோரோ வைரஸ் குறித்து அச்சப்படத்தேவையில்லை என்றும் அதே நேரத்தில் மக்கள் இது குறித்து விழிப்புடன் இருக்க வேண்டும் என்றும் அம்மாநில சுகாதார அமைச்சர் வீனா ஜார்ஜ் தெரிவித்துள்ளார்.