வெள்ளம் பாதித்த பகுதிகளை சீரமைக்க 500 கோடி ரூபாய் வழங்க முடிவு - கர்நாடக முதலமைச்சர் பசவராஜ் பொம்மை

கர்நாடக மாநிலத்தில் பெய்து வரும் கனமழையால் 32 பேர் உயிரிழந்துள்ளதாகவும் சீரமைப்பு பணிகளுக்கு ரூ.500 கோடி வழங்கப்படும் என முதலமைச்சர் பசவராஜ் பொம்மை தெரிவித்துள்ளார்.

வெள்ளம் பாதித்த பகுதிகளை சீரமைக்க 500 கோடி ரூபாய் வழங்க முடிவு - கர்நாடக முதலமைச்சர் பசவராஜ் பொம்மை

பருவ மழையின் தாக்கம் தீவிரமடைந்துள்ள நிலையில், கர்நாடக மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும், கனமழை காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்ப்டுள்ளது. கே.ஆர்.எஸ், கபினி அணைகள் நிரம்பி வருவதால் காவிரி கரையோரம் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லவும் உத்தரவிடப்பட்டது. உடுப்பி மாவட்டத்தில் பிரமவார், நீலவாரா, பைந்தூர் உள்ளிட்ட கிராமங்களில் ஏராளமான வீடுகள், விளைநிலங்கள் நீரில் மூழ்கியுள்ளன. குறிப்பாக கர்நாடகாவின் கடலோர மாவட்டங்களில் பெய்த கனமழையால், இதுவரை 32 பேர் பலியாகியுள்ளனர். 

கர்நாடக மாநில முதலமைச்சர் பசவராஜ் பொம்மை, வெள்ளம் பாதித்த பகுதிகளை ஆய்வு செய்த பின்னர் பேசிய அவர், மழையினால் ஏற்பட்ட இழப்புகள் குறித்த விரிவான அறிக்கை அனைத்து மாவட்டங்களிலும் பெறப்பட்டு, பின்னர் தேசிய பேரிடர் நிவாரண நிதியின் கீழ் நிவாரணம் பெற மையத்திற்கு அனுப்பப்படும் என்றும்,  NDRF மற்றும் SDRF இன் தலா நான்கு குழுக்கள் நிவாரண நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன, மேலும் மூன்று மாவட்டங்களில் 14 நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன என்றும் கூறினார். மேலும் கனமழையின் போது சேதமடைந்த அடிப்படை வசதிகள் மற்றும் உள்கட்டமைப்புகளை மீட்டெடுக்க, 500 கோடி ரூபாயை சீரமைப்புகளுக்காக முதல்வர்  வழங்கினார்.