கழிவுநீரை இறங்கி சுத்தம் செய்த கவுன்சிலர்..பாலால் குளிப்பாட்டிய தொண்டர்கள்! வாக்குக்காக இப்படியா?

முதல்வன் பட பாணியில் பாலபிஷேகம் - டெல்லி ஆம் ஆத்மி கவுன்சிலரின் வாக்கு சேகரிப்பு சேட்டை
கழிவுநீரை இறங்கி சுத்தம் செய்த கவுன்சிலர்..பாலால் குளிப்பாட்டிய தொண்டர்கள்! வாக்குக்காக இப்படியா?
Published on
Updated on
1 min read

டெல்லியில் விரைவில் உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ள நிலையில் வாக்கு சேகரிக்கிறோம் என்ற பெயரில் வேட்பாளர்கள் செய்யும் சேட்டைகளுக்கு அளவு இல்லாமல் போய்விட்டது.

ஆம் தமிழில் அர்ஜுன் நடித்து மெகா ஹிட்டான முதல்வன் படத்தில் அர்ஜுனை மக்கள் பாலை ஊற்றி குளிப்பாட்டும் காட்சியை மக்கள் மறந்திருக்க வாய்ப்பில்லை. இதனை அப்படியே ரீமேக் செய்தார் போல டெல்லியில் ஒரு சம்பவம் நடந்தேறியுள்ளது.

அதாவது உள்ளாட்சி தேர்தலையொட்டி பாஜக பதவியில் இருக்கும் கிழக்கு டெல்லி பகுதியில் வாக்குசேகரிப்பில் ஈடுபட்ட ஆம் ஆத்மி வேட்பாளர் ஹசீப்-உல்-ஹசன் நிரம்பி வழியும் கழிவுநீர் வடிகாலில் இறங்கி அதனை சுத்தம் செய்கிறார்.

பிறகு அவரை கட்சி தொண்டர்கள் பாலால் குளிப்பாட்டுகின்றனர். இதன் வீடியோ இணையத்தில் வைரலாகி வர மறு பக்கம் வேட்பாளரின் சேட்டையை மக்கள் கேலி செய்து வருகின்றனர். 

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com