உலக பாரம்பரிய பட்டியலில் இடம்பிடித்த தோலவிரா...
யுனெஸ்கோ உலக பாரம்பரிய இடங்கள் பட்டியலில் குஜராத் மாநிலத்தின் தோலவிரா இடம்பிடித்துள்ளது.


பீகார் மாநிலத்தில் 63 சதவீதத்திற்கும் அதிகமாக பிற்படுத்தப்பட்ட பிரிவினர் உள்ளதாக தெரியவந்துள்ளது.
பீகார் மாநிலத்தில் எடுக்கப்பட்ட சாதிவாரி கணக்கெடுப்பு முடிவுகளை அம்மாநில அரசு நேற்று வெளியிட்டது. இதில், மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவினர் மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினர் 63 சதவீதத்திற்கும் அதிகமாக உள்ளது தெரியவந்துள்ளது.
இதையும் படிக்க : ஆசிய விளையாட்டின் 10வது நாள்: 7 பதக்கங்களை வென்றது இந்தியா!
அதன்படி, மாநில மக்கள் தொகையில் மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்கள் 36 சதவீதமும் இதர பிற்படுத்தப்பட்டவர்கள் 27 புள்ளி 13 சதவீதமும் உள்ளனர். அட்டவணைப் பிரிவு மக்கள் 19 புள்ளி 65 சதவீதமும் பழங்குடியின மக்கள் 1 புள்ளி 68 சதவீதமும் உள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்து மதத்தினர் 81 புள்ளி 99 சதவீதமும், இஸ்லாம் மதத்தினர் 17 புள்ளி 7 சதவீதமும் இருப்பதாக கூறப்படுகிறது.
பீகார் மாநிலத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு சாத்தியமானதைத் தொடர்ந்து, பல்வேறு மாநிலங்களில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்ற கோரிக்கைகள் வலுத்துள்ளது. இதன் தொடர்ச்சியாக மத்திய பிரதேச மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும் என்று ராகுல் காந்தி வாக்குறுதி அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
சத்தீஸ்கா் மற்றும் தெலங்கானா மாநிலங்களில் பல்வேறு வளா்ச்சி திட்ட பணிகளை பிரதமா் மோடி இன்று தொடங்கி வைக்கிறாா்.
பிரதமர் மோடி சமீப மாதங்களாகத் தேர்தல் நடைபெறும் மாநிலங்களில் தனது அரசியல் பிரசாரத்தை மேற்கொண்டு வருகிறார். அதன்படி, தேர்தல் நடைபெறவுள்ள சத்தீஸ்கர் மாநிலத்துக்கு இன்று செல்லவுள்ளார். அங்கு அவா், நாகர்னரில் 23 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள என்எம்டிசி ஸ்டீல் லிமிடெட் ஆலையை நாட்டுக்கு அர்ப்பணிக்க உள்ளார்.
இதையும் படிக்க : இலவச வீட்டு மனைப்பட்டா கேட்டு சாலை மறியல்; போலீசார் தடியடி!
தொடா்ந்து ஜக்தல்பூர் ரயில் நிலையத்தை மேம்படுத்துவதற்கான அடிக்கல்லை நாட்டுகிறாா். பிறகு தெலங்கானா செல்லும் பிரதமா் மோடி அங்கு 8 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறாா்.
பின்னா் தெலங்கானா சூப்பர் அனல் மின் திட்டத்தின் 800 மெகாவாட் அலகு மற்றும் பல்வேறு ரயில் உள்கட்டமைப்பு திட்டங்களை தொடங்கி வைக்கும் மோடி, பிரதான் மந்திரி - ஆயுஷ்மான் பாரத் சுகாதார உள்கட்டமைப்பு இயக்கத்தின் கீழ் கட்டப்படவுள்ள 20 முக்கியமான பராமரிப்பு மையத்துக்கும் அடிக்கல் நாட்டுகிறார்.
PM Modi starts various plans today
மத்திய பிரதேசம் மற்றும் ராஜஸ்தான் மாநிலங்களில் 26 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு வளா்ச்சி திட்ட பணிகளுக்கு பிரதமா் மோடி இன்று அடிக்கல் நாட்டுகிறார்.
பிரதமா் நரேந்திர மோடி மத்திய பிரதேசம் மற்றும் ராஜஸ்தான் மாநிலங்களுக்கு இன்று சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். அதன்படி ராஜஸ்தானின் சித்தூா்கா் பகுதிக்கு பயணம் மேற்கொள்ளும் பிரதமா் மோடி அங்கு மெஹசானா- பதிண்டா - குா்தாஸ்பூா் எரிவாயு குழாய் இணைப்பைத் தொடங்கி வைக்கிறார். அபு சாலையில், ஹிந்துதாஸ்தான் பெட்ரோலியம் காா்ப்பரேஷன் நிறுவனம் அமைத்துள்ள சமையல் எரிவாயு நிரப்பும் நிலையத்தைத் தொடங்கி வைக்கிறாா்.
மேலும், ஆயிரத்து 480 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்ட தாரா - ஜலவா் - தீன்தா் பிரிவின் நான்கு வழி தேசிய நெடுஞ்சாலையை நாட்டுக்கு அா்ப்பணிக்கிறாா். கோட்டாவில் தேசிய தகவல் தொழில்நுட்பக் கழகத்தின் நிரந்த வளாகம், பல்வேறு ரயில்வே திட்டங்கள் உள்ளிட்டவற்றையும் பிரதமர் மோடி தொடங்கி வைக்க உள்ளார்.
தொடா்ந்து 11 ஆயிரத்து 895 கோடி ரூபாய் மதிப்பில் மேம்படுத்தப்பட்ட டெல்லி - வதோதரா விரைவுச்சாலையை மத்திய பிரதேச மாநிலம் குவாலியரில் தொடங்கி வைக்கவுள்ள மோடி, ஆயிரத்து 880 கோடி ரூபாய் மதிப்பிலான 5 சாலைத் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறாா். பிரதமரின் அனைவருக்கும் வீட்டு வசதி திட்டத்தின்கீழ் ஊரக மற்றும் நகா்புறப் பகுதிகளில் கட்டப்பட்ட வீடுகள், ஜல் ஜீவன் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை தொடங்கி வைக்கிறாா்.
மத்திய பிரதேசம், ராஜஸ்தான் ஆகிய இரு மாநில சட்டப்பேரவைகளின் பதவிக்காலம் முடிவடைய உள்ள நிலையில், நவம்பா் - டிசம்பா் மாதங்களில் அந்த மாநிலங்களுக்குப் பேரவைத் தோ்தல் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.
தூய்மை இந்தியா அழைப்பின் ஒரு பகுதியாக டெல்லியில் பிரதமர் மோடி குப்பைகளை அகற்றிய நிலையில், நாடு முழுவதும் மத்திய அமைச்சர்களும் தூய்மைப் பணிகளில் ஈடுபட்டனர்.
காந்தி ஜெயந்தியை முன்னிட்டு இன்று நாடு முழுவதும் 7 லட்சம் இடங்களில் தூய்மைப் பணிகளில் ஈடுபடுமாறு மக்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு விடுத்தார். தொடர்ந்து டெல்லியில் பளுதூக்கும் வீரரான அன்கித் பய்யன்புரியாவுடன் பிரதமர் மோடி குப்பைகளை அகற்றி சுத்தம் செய்தார்.
குஜராத்தின் அகமதாபாத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சாலையில் குப்பைகளை அகற்றிய நிலையில், ஹரியானாவின் குருகிராமில் மத்திய அமைச்சர் அஷ்விணி வைஷ்ணவ் தூய்மைப்பணி மேற்கொண்டார். டெல்லியில் ஜிதேந்திர சிங், ராஜீவ் ராஜசேகர், ராஜஸ்தானில் பியூஷ்கோயல் உள்ளிட்ட மத்திய அமைச்சர்களும் குப்பைகளை அகற்றினர்.
உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் சீதாபூரில் தூய்மைப் பணி மேற்கொண்டதோடு, மகாராஷ்டிரா முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே மும்பையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்று குப்பைகளை அகற்றினார்.
இதேபோன்று மக்களவை சபாநாயகர் ஓம்பிர்லா, பாஜக தேசியத்தலைவர் நட்டா உள்ளிட்டோரும் சாலைகளில் இறங்கி தூய்மைப்பணி மேற்கொண்டனர்.
இதையும் படிக்க: குன்னூர் விபத்து பிரதமர் குடியரசுத் தலைவர் இரங்கல்!
சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கும் தெலங்கானாவில் பிரதமர் மோடி இன்று பிரசாரம் மேற்கொள்கிறார்.
தெலங்கானா சட்டப்பேரவைத் தேர்தல் விரைவில் நடைபெறவுள்ள நிலையில், ஆளும் BRS கட்சியானது முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை சமீபத்தில் வெளியிட்டது.
தொடர்ந்து பாஜக சார்பில் பிரசாரத்தை மேற்கொள்ளும் வகையில் இன்று தெலங்கானா செல்லும் பிரதமர் மோடி, மெகபூப்நகர் மாவட்டத்தில் 13 ஆயிரத்து 500 கோடி ரூபாய் மதிப்பிலான அரசுத் திட்டங்களைத் தொடங்கி வைக்கிறார்.
இதைத்தொடர்ந்து நாக்பூர் - விஜயவாடா சாலைத்திட்டம், ஜக்லெய்ர் - கிருஷ்ணா புதிய ரயில் சேவைத் திட்டம் உள்ளிட்டவையும் தொடங்கி வைக்கப்படவுள்ளன. தொடர்ந்து பல்வேறு ரயில்சேவைகளை காணொலி வாயிலாகத் திறந்துவைத்து, தேர்தல் பிரசாரத்தில் பிரதமர் மோடி ஈடுபடுகிறார்.
ஐதராபாத் பல்கலைக்கழகத்தின் 5 புதிய கட்டிடங்களையும் பிரதமர் மோடி திறந்து வைக்கிறார். அப்போது வாகனத்தில் சென்று மக்களை சந்தித்து, தொடர்ந்து மக்களிடம் உரையாற்றுவார் எனவும் கூறப்பட்டுள்ளது.
இதையும் படிக்க : நடிகர் சிவாஜி கணேசனின் 96-ஆவது பிறந்த நாள்...தமிழ்நாடு அரசு சார்பில் மரியாதை!