ஆதார் நகலை யாருடனும் பகிர வேண்டாம்..இதை பயன்படுத்துக- மத்திய அரசு எச்சரிக்கை

ஆதார் நகலை யாருடனும் பகிர வேண்டாம்..இதை பயன்படுத்துக- மத்திய அரசு எச்சரிக்கை

ஆதார் நகலை யாருடனும் பகிர வேண்டாம் என எச்சரித்துள்ள மத்திய அரசு, தேவைப்படும் இடங்களில் கடைசி 4 எண்களை மட்டும் காண்பிக்கும் மாஸ்க்டு ஆதாரை பயன்படுத்தும்படி அறிவுறுத்தியுள்ளது.

இதுதொடர்பாக மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பில்,  UIDAI அங்கீகாரம் பெற்ற நிறுவனங்களிடம் மட்டுமே ஆதார் பற்றிய தகவல்களை வழங்க அறிவுறுத்தியுள்ளது.

மேலும் ஓட்டல்கள், திரையரங்குகளில் ஆதார் நகலை வழங்க வேண்டிய அவசியமில்லை என்றும், அது சட்டப்படி குற்றம் என்றும், அதனை நிறுவனங்கள் தவறாக பயன்படுத்தும் ஆபத்து இருப்பதாகவும் எச்சரித்துள்ளது.

அத்தியாவசியமாக தனியார் நிறுவனங்கள் ஆதார் நகலை கேட்கும் பட்சத்தில், UIDAI வலைதளத்தில் கடைசி 4 எண்கள் மட்டும் தெரியக்கூடிய மாஸ்க்டு ஆதார் நகலை பயன்படுத்த அறிவுறுத்தியுள்ளது.